இலங்கை நிருவாக சேவையின் வகுப்பு III (SLAS) இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2007 (2009)
Limited Competitive Examination for Recruitment to Class III of the Sri Lanka Administrative Service (SLAS) – 2007 (2009)
கீழ்க்காணப்படும் கூற்றுக்கள் சரியா பிழையா எனத் தீர்மானித்து அவற்றின் எதிரே சரியாயின் "C" எனவும் பிழையாயின் "W" எனவும் இடைவெளியில் குறிப்பிடுக.
(i) தலைமைக் கணக்கீட்டு அதிகாரிகள் திறைசேரிச் செயலாளரினால் நியமிக்கப்படுவர். (…….)
(W) – நிதிப் பிரமாணம் 124இன் படி நிதி அமைச்சர் தனது சார்பில் பொது நிதியைத் திரட்டுவதற்கும் செலவழிப்பதற்கும் உத்தியோகத்தர்களை நியமித்தல் அவருக்கு அவசியமாகின்றது. ஆகவே தனது அமைச்சின் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தராகக் கடமையாற்றுவதற்கு ஒவ்வொரு அமைச்சின் செயலாளரையும் நியமிப்பார்.
(ii) அதிகாரத்தினை வழங்குதல் என்பது வேலை சேவையின் பொருட்டு முன்னமேயான அதிகாரத்தினை வழங்குவதாகும். ( C )
(iii) சட்டவாக்கப் பேரவையினால் நியமிக்கப்படும் கணக்காய்வாளர் நாயகம் பாராளுமன்றத்துக்குப் பொறுப்புடையவராக இருக்க வேண்டும் (…….)
(W) – இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பு சட்டத்தின் 153ம் சரத்துக்கமைவாக கணக்காய்வாளர் தலைமையதிபதி ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றார்.
(iv) ஒரு மறுக்கப்பட்ட காசோலை என்பது. நிதிப் பற்றாக்குறையின் காரணத்தால் வங்கியினால் திருப்பி அனுப்பப்பட்ட ஒரு காசோலையாகும். (C)
(v) கடந்த வருடங்கள் தொடர்பிலான கொடுப்பனவுகளுக்கான அங்கீகாரம் நிதிப்பிரமாணம் 118 இன்கீழ் வழங்கப்பட்டுள்ளது. (…….)
(W) நிதிப் பிரமாணம் 115 இன் கீழ்
(vi) திரட்டு நிதியத்திலிருந்து நிதியினைப் பெறுவதற்கான அதிகாரம் நிதியமைச்சரினால் வழங்கப்படும். ( C )
(vii) ஒரு வாக்குப்பணத்தினது (Vote) மீதமுள்ள ஒதுக்கீடுகளை இன்னொரு வாக்குப்பணத்திற்கு மாற்றுவது வகைமாற்று (Virements) நடைமுறை என அழைக்கப்படும். (…)
(W) ஒரு செலவுத் தலைப்பின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஏற்பாட்டில் காணப்படும் சேமிப்பை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் நடைமுறை வகைமாற்று நடைமுறை எனப்படும்.
(vii) அரச உத்தியோகத்தர்களது முற்பணக் கணக்குகள் தொடர்பில் வருட இறுதியின்போது தனித்துவக் கடன்மீதிப் பட்டியல் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
(ix) வருடாந்த ஒதுக்கிட்டுச் சட்டமானது ஜனாதிபதியினால் பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்படும். ( W )
(x) ஜனாதிபதியின் சம்பளங்கள் மற்றும் படிகள் என்பனவும் ஒதுக்கீட்டுச் சட்டத்தினுள் உள்ளடக்கப்பட வேண்டும். ( W )
2. கீழ்வரும் சோடிப் பதங்களிடையேயான வேறுபாட்டினைத் தருக.
(i) ஒதுக்கீட்டுக் கணக்கு ஒதுக்கீட்டுச் சட்டம்
ஒவ்வொரு நிதியாண்டு முடிவின் போதும் தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள மதிப்பீட்டின் பகுதி 1 இல் காட்டப்பட்டுள்ள செலவினங்கள் தொடர்பாக ஒவ்வொரு கணக்கீட்டு உத்தியோகத்தரும் தயாரிக்கும் கணக்கு ஒதுக்கீட்டு கணக்கு எனப்படும்.
திணைக்களத்தின் கணக்கீட்டு உத்தியோகத்தர் தயாரிக்கும் வரைபு மதிப்பீடுகளை (Draft Estimate) பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் தேசிய வரவு செலவுத்திட்ட பணிப்பாளருக்கு சமர்ப்பித்து அமைச்சரவையின் அங்கீகாரம் (Cabinet Approval) கிடைத்த பின்னர் நிதியமைச்சர் (Minister of Finance) அதனை ஒதுக்கீட்டு சட்டமூலத்துடன் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பார்.
பாராளுமன்றத்தில் குழுநிலை விவாதத்திற்கு பின்னர் சட்டமூலம் நிறைவேற்றப்படுமிடத்து அரசியலமைப்பு 80(1) பிரிவின்படி சபாநாயகரின் சான்றிதழ் இடப்பட்டபின் ஒதுக்கீட்டுச்சட்டமாக மாறும்.
இது ஒதுக்கீட்டு சட்டம் எனப்படும்.
(ii) களஞ்சிய உத்தியோகத்தர் / களஞ்சியக் காப்பாளர்
(iii) தலைமைக் கணக்கீட்டு உத்தியோகத்தர் / கணக்கீட்டு உத்தியோகத்தர்
சகல அமைச்சுக்களின் செயலாளர்களும் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர்களாக செயற்படுவர், சகல திணைக்களங்களின் தலைவர்களும் கணக்கீட்டு உத்தியோகத்தர்களாக செயற்படுவர்.
பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் நிதி அமைச்சருக்கு பொறுப்பு கூற வேண்டும். கணக்கீட்டு உத்தியோகத்தர் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு பொறுப்பு கூற வேண்டும்.
(iv) பொதுக் கணக்குக் குழு (COPA) / பொதுத்தாபனங்கள் மீதான குழு (COPE)
அமைச்சுக்கள், திணைக்களங்கள், உள்ளூராட்சி சபைகள் என்பனவற்றின் கணக்குகள் தொடர்பாக ஆராய்ந்து பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்படும் குழு பொதுக் கணக்குகள் குழு எனப்படும். இக்குழுவில் 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு கோப் (COPE) எனப்படுகிறது. கோப் குழுவில் 16 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
(v) மதிப்பீட்டு உத்தியோகத்தர் சேகரிப்பு உத்தியோகத்தர்
ஒரு குறித்த நிதியாண்டில் அரசுக்கு சேரவேண்டிய பல வழிகளிலுமான வருமானத்தை உத்தேசித்து கணிப்பிடுவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் மதிப்பீட்டு உத்தியோகத்தர் எனப்படுகிறார்.
இவ்வாறு மதிப்பிடப்பட்ட வருமானத்தை சேகரிக்கும் கடமை வழங்கப்பட்டுள்ள உத்தியோகத்தர் சேகரிக்கும் உத்தியோகத்தர் எனப்படுகிறார்.
3. பாராளுமன்றத்தின் மூலமான பொது நிதிக்கட்டுப்பாடு பொதுக் கணக்குக் குழுவின் மூலமாக நிறைவேற்றப்படும். நிதிப்பிரமாணம் 152 இற்கேற்ப அந்நிலையியற் கட்டளை 125 எவ்வாறு காணப்படுகிறது ?
அ) அரசாங்கக் கணக்குக் குழு (Committee of Public Account) பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றினால் நியமிக்கப்பட்ட 12 அங்கத்தவர்களைக் கொண்டது
ஆ) அரசாங்க செலவுகளுக்காக பாராளுமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட தொகையின் ஒதுக்கீடுகளைக் காட்டும் கணக்குகளையும், அவை பற்றிய கணக்காய்வாளர் அதிபதியின் அறிக்கையையும், உள்ளூர் அதிகார சபைகள் பற்றிய கணக்காய்வாளர் அதிபதியின் அறிக்கையையும் பரிசீலிப்பது இக்குழுவின் கடமையாகும்.
இ) இக்குழுவானது ஏதாவது திணைக்களத்தின், மற்றும் உள்ளூர் அதிகார சபையின் பரிசோதித்த கணக்குகள், நிதி நடைமுறைகள் தொடர்பாக பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
ஈ) தேவையெனக் கருதும் போது குழு பணிக்கக் கூடியவாறு பரிசோதனை செய்து குழுவுக்கு அறிக்கை சமர்ப்பரிப்பதற்கு தனது சொந்த உறுப்பினர்களைக் கொண்ட உப குழுக்களை நியமிக்கலாம்.
உ) குழு அல்லது அதன் பிற உப குழு தனது கடமைகளை புரிவதற்காக எவராவது ஆளை அழைத்து விசாரிப்பதற்கும் அல்லது பிற ஆவணத்தை வரவழைத்து சோதனை செய்வதற்கும் தத்துவம் கொண்டிருக்கும்.
ஊ) குழுவினது குறைநிறைவு எண்ணிக்கை நான்கு (04) அங்கத்தவர்களாக அமையும்.
4, வருடாந்த மதிப்படுகளில்
(1) மூலதனச் செலவினங்கள் மற்றும் மீண்டுவரும் செலவினங்கள் என்பவற்றை வகைப்படுத்துவதன் முக்கியத்துவத்தினை எடுத்துக்கூறுக.
(ii) மூலதன மற்றும் மீண்டுவரும் செலவினங்கள் ஒவ்வொன்றினதும் ஐந்து செலவு விடயங்களை எடுத்துக்கூறுக.
மூலதனச் செலவு
1. கட்டிடம் Building
2. அடிப்படை வசதிகள்
3. இயந்திரம் Machinery
4. உபகரணங்கள் Equipment
5. தளபாடம்
மீண்டுவரும் செலவுகள்
1. வாகனப் பராமரிப்பு Vehicle Maintenance
2. ஊழியர் சம்பளம் Salary
3. பிரயாணக் கொடுப்பனவு Travelling Allowance
4. காகிதாதிகள் Stationary
5. மின்சாரக் கட்டணம். Electricity Bill Payment
5. கச்சேரி ஒன்றில் பேணப்படவேண்டிய பத்து வகையான புத்தகங்களைக் குறிப்பிட்டு அவற்றைச் சுருக்கமாக விவரிக்குக.
1. பொதுக் காசேடு – பொது 58
2. சிறாப்பரின் காசேடு – ஜீ. ஏ. என் – 1
3. பற்றுச்சீட்டு புத்தகம் – பொது 172
4. சிறாப்பரின் துணைப்பதிவேடுகள் – ஜீ.ஏ.என் 17
5. சிறாப்பரின் சுற்று பயண காசேடு – ஜீ.ஏ.என் 18
6. வங்கி மீதி கணக்கிணங்க ஏடு – ஜி.ஏ.எம் -31
7. நாள்முறைச் சமநிலை ஏடு – ஜீ.ஏ.என் 4
8. நிலவறை ஏடு – ஜீ.ஏ.எம் – 49
9. வகைப்படுத்தல் ஏடு
10. தொகுப்பேடுகள்
11. காசோலை காசுக்கட்டளை பதிவேடு – ஜீ.ஏ.எம் 83
12. கச்சேரி வைப்பு பேரேடு – பொது 69
6. கீழ்வரும் சூழ்நிலைகள் ஒவ்வொன்றிலும் கருத்திற்கொள்ளப்பட வேண்டிய ஐந்து விடயங்கள் வீதம் எடுத்துக்கூறுக.
(i) உறுதிச்சீட்டு (Voucher) ஒன்றை உறுதிப்படுத்தும்போது
1. ஒவ்வொரு கொடுப்பனவும் பொருத்தமான செலவுத்தலைப்பு நிகழ்ச்சித் திட்டம், கருத்திட்டம், உபகருத்திட்டம் நோக்க விடயம் என்பவற்றிற்கு அமைவானது என்பதை உறுதிப்படுத்தல்.
02. குறிப்பிட்ட கொடுப்பனவானது அந்நிதியாண்டிற்கான ஏற்பாட்டை விஞ்சச் செய்யாது என்பதையும் ஒதுக்கீட்டுப் பேரேட்டில் உரிய பக்கத்தில் பதியப்பட்டுள்ளதென்பதையும் உறுதி செய்தல்.
03. உறுதிப்பத்திரத்திலுள்ள பெயர் கொடுப்பனவுக்குரியது என்பதையும் சரியான தொகை குறிக்கப்பட்டிருத்தலையும் உறுதி செய்தல்.
04, உறுதிப்பத்திரத்தை சான்றுறுதிப்படுத்தும்போது நி.பி 136, 137 ஆகியவற்றின் ஏற்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டிருப்பது பற்றித் திருப்தியடைதல்
05. ஒரு கொடுப்பனவு உறுதிப்பத்திரத்திரம் `உரிய ஏடுகள், பதிவேடுகள் என்பவற்றில் பதியப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்தல்.
06. உறுதிப்பத்திரத்தில் உரிய சான்றிதழ்கள் இணைக்கப்பட்டிருத்தலையும்
கோவை தொடர்பிலக்கம் குறிப்பிடப்பட்டிருத்தலையும் உறுதி செய்தல்.
07. தனக்கு அறிவிக்கப்படும் அல்லது அதிகாரமளிக்கப்படும், அறவீடுகளுக்கான கழிப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டிருத்தலை உறுதிப்படுத்தல்.
(ii) உறுதிச் சீட்டு ஒன்றின்மீது கொடுப்பனவு மேற்கொள்ளும்போது
1. ஒவ்வொரு உறுதிச்சீட்டும் அத்தாட்சிப் படுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்டவரால் அத்தாட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என பரிசீலனை செய்தல் வேண்டும்.
2. உறுதிச்சிட்டு முறையாக சான்றுப்படுத்தப்பட்டுள்ளதா என பரிசீலனை செய்தல்
3. அத்தாட்சிப்படுத்தப் பட்ட பின்னர் அவ் உறுதிச்சீட்டில் தொகைகள் (Amount) மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என பரிசீலனை செய்தல்
4. கொடுப்பனவின் போதும் முறையான பற்றுச்சீட்டுக்கள், ஒப்பங்கள் (Receipt & Signature) பெற்றுக்கொள்ளல்.
5. ஆள் அடையாளத்தை நிரூபிப்பதற்கான சான்றுகளை (Identification) பரிசீலித்தல்.
6. உறுதிச்சீட்டுடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளதா என பரீசீலனை செய்தல்
7. உறுதிச்சீட்டுடன் இணைக்கப்பட்ட சான்றிதழில் உள்ள பெயர்கள் தொகைகள் திகதிகள் என்பன உறுதிச்சீட்டுக்கு பொருத்தமானதா என பரிசீலனை செய்தல்
8. கொடுப்பனவை மேற்கொள்ளும் போது உறுதிச்சீட்டில் செலுத்தப்பட்டுள்ளது எனும் (Paid) பதம் பொறிக்கப்பட்டு முதலெழுத்தொப்பமிடல்
9. உரிய பதிவேடுகளில் பதிவுகளை (Ledger) மேற்கொள்ளல்
10. ஒவ்வாரு நாளும் கொடுப்பனவு முடிவின் போது கையிருப்பு மீதிகளை புத்தக மீதிகளுடன் (Book Balance) சரிபார்த்தல்.
7. கீழ்வருவனவற்றுக்கு சிறுகுறிப்புகள் எழுதுக.
(i) அடையாள ஏற்பாடுகள் (Token provisions)
தொடர் ஆண்டுகளில் இடம்பெறவுள்ள பாரிய வேலைகளுக்கான மதிப்பீடு அங்கீகரிக்கப்பட்டதை அறிவிக்கும் ஏற்பாடு அடையாள ஏற்பாடு எனப்படும்.
(ii) நட்டவீட்டு முறி (Compensation bond)
வழங்கப்பட்ட காசோலை ஒன்று காணாமல் போனதாக உரியவரால் அறிவிக்கும் போது அவருக்கு அக்காசோலைக்கு பதிலாக புதிய காசோலை வழங்கும் முன்னர் உரியவரிடமிருந்து நி.பி. 392 இற்கமைய பெற்றுக்கொள்ளப்படும் நட்டவீட்டு பத்திரம் நட்டவீட்டு முறி எனப்படும்.
(iii) கட்டுநிதி மீதான அதிகாரம்
திறைசேரியின் அரச கணக்குகள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் திணைக்களங்களிலிருந்து கிடைக்கப்பெறும் கட்டுநிதிக்கான விண்ணப்பம் நுணுக்கமாக பரீட்சிக்கப்பட்டு கட்டுநிதி எல்லைக்கான அங்கீகாரம் வழங்கப்படும். இதனைக் குறித்து அவரால் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் கடிதம் கட்டுநிதி அதிகாரம் எனப்படும்.
iv) எதிர்பாரா பின் நிகழ்ச்சி செலவு நிதியம்
Contingencies fund
நாட்டில் இடம் பெறும் எதிர்பாரா இயற்கை அனர்த்தங்கள் அல்லது அவசியத்தேவை என்பவற்றிற்குத் தேவையான நிதியை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள நிதியம் எதிர்பாரா பின்நிகழ்ச்சிச் செலவு நிதியம் எனப்படும்.
வகை மாற்று நடவடிக்கை, குறைநிரப்பு மதிப்பீடு என்பவற்றின் மூலம் உடனடியாக நிதி ஏற்பாட்டை அங்கீகரித்துப் பெற முடியாத சந்தர்ப்பங்களிலேயே இந்நிதியிலிருந்து முற்பணம் வழங்கப்படும்.
நிதியமைச்சர் இவ்வாறு நிதி வழங்குதல் அவசியமானதெனத் திருப்தியடையுமிடத்து ஜனாதிபதியின் ஒருமைப்பாட்டுடன் இதனை வழங்குவார்.
இதனைப்பெறும் திணைக்களம், வகைமாற்று நடவடிக்கை, குறைநிரப்பு மதிப்பீடு, புதிய ஆண்டிற்கான மதிப்பீடு ஆகியவற்றுள் எதன் மூலமாவது நிதி ஏற்பாட்டைப் பெற்று இம்முற்பணத்தினைத் திருப்பிச் செலுத்துதல் வேண்டும்.
No comments:
Post a Comment