Tuesday, November 9, 2021

Office Systems Past Paper அலுவலக நடைமுறைகள்

அரசாங்க, மாகாண அரசாங்க பொது முகாமைத்துவ சேவை தரம் III பிரிவிலுள்ள உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப் பரீட்சை, 1997 பெப்ருவரி

அலுவலக முறைமைகளும் நடைமுறையும்
Office Systems and Procedure



Past Paper

கடந்தகால வினாத்தாள் வினாக்கள் இது தரம் III அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் பொருத்தமானது.


1) பின்வருவன பற்றச் சிறு குறிப்புகள் எழுதுக, 

(i) விடயக் கோப்புகள் 

(ii) அந்தரங்கக் கடிதத் தொடர்பு 

(iii) அழிக்கப்பட வேண்டிய கோப்புகள் தொடர்பாகப் பேணப்படவேண்டிய விவரங்கள் 

(iv) பொது சனத் தொடர்பு 

(v) நினைவுகூர் நாளேடு ( Call up diary )

2) “தபால்” என்பது பற்றிச் சுருக்கமான விவரணமொன்றினைத் தந்து, “தபால்” இற்குப் பொறுப்பாயுள்ள அலுவலரினாற் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறையை விளக்குக.

3) “பயனுறுதிவாய்ந்த அலுவலகக் குறிப்பொன்று உடனடியானதும் திருத்தமானதுமான தீர்மாங்களை எடுப்பதற்கு உதவுகின்றது.” பயனுறுதிவாய்ந்த அலுவலகக் குறிப்பொன்றிலே சேர்க்கப்படவேண்டிய அமிசங்களைக் குறிப்பிட்டு மேற்போந்த கூற்று பற்றிய உமது கருத்துக்களைக் கூறுக.

4) உமக்குக் கிடைக்கப்பெற்ற கடிதம் தொடர்பாக, பதவிநிலை உத்தியோகத்தரின் அறிவுறுத்தலுடன் அனுப்பப்பட வேண்டிய மறுமொழிக் கடிதம் தொடர்பில், நீர் பின்பற்ற வேண்டிய நடைமுறையை விளக்குக.

5) அலுவலக வேலையில் படிவங்களின் முக்கியத்துவம் யாது என்பது பற்றிச் சிறு விவரமொன்று தந்து, தற்போது பயன்பாட்டிலுள்ள படிவமொன்றினைத் திருத்துவது தொடர்பாகக் கருத்திற்கொள்ளப்படவேண்டிய காரணிகளை விளக்குக.


No comments:

Post a Comment