Saturday, November 20, 2021

MSO I Past Paper 2021 Answer

Efficiency Bar Examination for MSO Grade I Service – Past Paper with Answers

2021.11.20ம் திகதி இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சேவை தரம் 1 இற்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை கடந்தகால வினாப்பத்திரம் விடைகளுடன் 

Welcome to EB Exam



Establishment Procedures and Procedural Rules – Paper Part II

முகாமைத்துவ சேவை அலுவலர்கள் சேவையின் தரம் 1 இலுள்ள அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை – 2015 (II) 2021
Efficiency Bar Examination for Officers in Grade 1 of Management Service Officers Service – 2015 (11) 2021

தாபனப் பணிகளும் செயலொழுங்கு (நடைமுறை) விதிகளும்  பகுதி – 1

1. இளைப்பாறுவதாலோ அல்லது தானாகவே கேட்டு விலகுவதாலோ அரசாங்க சேவையிலிருந்து விலகிச்செல்லும் உத்தியோகத்தரொருவருக்கு வழங்கப்படும் சேவைச் சான்றிதழ் ஒன்றில் உள்ளடங்க வேண்டிய விடயங்கள் ஐந்தினைக் குறிப்பிடுக.

அ) சம்பந்தப்பட்ட உத்தியோகத்தரின் பெயர் :

ஆ) அரச சேவையின் கீழ் பணியாற்றிய காலம் :

இ) அலுவலகங்களின் பெயர்களுடனும் திகதிகளுடனும் வகித்த பதவி நிலைகள் தொடர்பான விபரம்,

ஈ) அரச சேவையிலிருந்து விலகுவதற்கான காரணம்:

உ) வினைத்திறமை தொடர்பான விபரம்:

ஊ) பொது நடத்தை:

2. உத்தியோகத்தரொருவருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்ட பதவியின் சம்பளமானது சம்பள ஏற்றத்துடனான சம்பள அளவுத்திட்டமொன்றாக இருக்குமிடத்து அவரது சம்பளத்தை புதிய சம்பள அளவுத்திட்டத்துக்கு மாற்றியமைக்கும் போது பின்பற்ற வேண்டிய நியதிகளை தாபனக் கோவையின் VII ஆம் அத்தியாயத்தின் 5.3 பிரிவுக்கிணங்க எடுத்துக்காட்டுக.

இதற்கான விடை கடந்த பதிவுகளில்

3. தாபனக்கோவையின் VII ஆம் அத்தியாயத்தின் 12.2 பிரிவுக்கிணங்க பதில் கடமை சம்பளம் வழங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் ஐந்தைக் குறிப்பிடுக.

அரசசேவையில் நிரந்தரப் பதவியினை வகிக்கும் அலுவலர் ஒருவர் வேறு ஒரு பதவியில் பதில் கடமையாற்றுவதற்கு நியமனம் செய்யப்படும் போது அவர் “பதில்
கடமைச் சம்பளம்” ஒன்றினைப் பெற்றுக் கொள்ளக்கூடிய  சந்தர்ப்பங்கள்,

அ) அவர் பதில் கடமைக்காக நியமிக்கப்படுகின்ற பதவி அவரது நிரந்தரப் பதவியை விடவும் உயர் தரத்தினை கொண்ட பதவியாக இருத்தல் வேண்டும்.

ஆ) பதில் கடமை பதவியானது அவரது நிரந்தர பதவிக்கு “சம தரத்திலான” பதவியாக இருக்குமிடத்து அவர் தனது நிரந்தரக் கடமைகளுக்குப் மேலதிகமாக அங்கு பதில் கடமையாற்றுதல் வேண்டும்.

இ) பதில் கடமை  பதவியானது முழு நேரப் பதவியாகவும், விரைவில் முழுநேர உத்தியோகத்தர் நியமனம் செய்யப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பதவியாகவும் அமைதல் வேண்டும்.

ஈ) பதில் கடமை பதவி வெற்றிடமாகக் காணப்படுதல் வேண்டும். அல்லது அந்தப் பதவியை வகிக்கும் அலுவலர் கடமைக்கு நிலையாக சமுகமளிக்காதிருத்தல் வேண்டும்.

உ) பதில் கடமை நியமனம் (Acting Appointment) உரிய நியமன அதிகாரியினால் முறையாக வழங்கப்பட்டிருத்தல்வேண்டும்.

ஊ) பதில் கடமைக்கான சம்பளத்தை வழங்குவதற்கு உரிய அமைச்சின் செயலாளரின் முறையான அனுமதி வழங்கப்பட்டிருத்தல் வேண்டும்.

4. அரசாங்க சேவையில் நியமனம் பெற்றுள்ள ஒருவர் கடமையைப் பொறுப்பேற்கும்போது நிறுவனத் தலைவரிடம் கையளிக்க வேண்டிய ஆவணங்கள் ஐந்தினைக் குறிப்பிடுக.

(i) தேசிய அடையாள அட்டையின் உறுதிப்படுத்திய பிரதி.

(ii) பிறப்புச் சான்றிதழ்.

(iii) கல்வித் தகைமைகளையும் ஏதேனும் பிற  தொழில்சார் தகைமைகளையும் சான்றுப்படுத்தும் சான்றிதழ் பிரதிகள்

(iv) திருமணம் செய்திருந்தால் திருமணச் சான்றிதழும் வாழ்க்கைத்துணையின்  மற்றும் பிள்ளைகளின் பிறப்புச்  சான்றிதழ்களின் பிரதிகளும்.

(v) சேவை உடன்படிக்கை படிவம் பொது 160 இல்.

(vi) சொத்துகளின் பிரகடனம் படிவம் பொது 261 இல்.

(vii) சொத்துக்கள், பொறுப்புகளின் பிரகடனம்.

(viii) நிரந்தர அல்லது தற்காலிக இருப்பிட முகவரி, தொலைபேசி இலக்கம்.

5. பதவியொன்றில் பதிற் கடமையாற்றுவதற்காகச் செய்யப்படும் நியமனங்களுக்கு ஏற்புடைய அரசாங்க சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகள் IX ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள் ஐந்தைக் குறிப்பிட்டு, அவற்றைச் சுருக்கமாக விவரிக்குக.

I) நியமிப்பு அதிகாரம்:

பதில் கடமை நியமிப்பைச் செய்வதற்கான அதிகாரம் நியமிப்புச் செய்யும் அதிகாரியிடமே முழுமையாக உள்ளது.

II) பதிற் கடமைக்கான தகைமை:

ஒப்பிடத்தக்க பதவியில் அல்லது அதற்கு உடன் கீழேயுள்ள பதவியில் சேவையாற்றுகின்ற, நிரந்தரப் பதவியில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதோடு இயைபுள்ள பதவியின் அங்கீகரிக்கப்பட்ட சேவைப் பிரமாணக் குறிப்பின் அல்லது ஆட்சேர்ப்பு திட்டத்தில் விதித்துரைக்கப்பட்ட சகல தகைமைகளையும் பூர்த்தி செயதிருத்தல் வேண்டும்.

இன் நியதிகளின்படி பொருத்தமான உத்தியோகத்தர் எவரும் இல்லாதவிடத்து, அப்பதவியின் கடமைகளைப் புரிவதற்கு நியமிப்புச் செய்யும் அதிகாரி மிகப் பொருத்தமான உத்தியோகத்தர் ஒருவரை நியமிக்கலாம்.

III) பதில்கடமை நியமனத்தின் தன்மை:

ஒரு பதில் கடமை நியமனம், சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு, ஒரு பதவியின் வேலையை முழுநேர அடிப்படையில் நிறைவேற்றுவதற்காக அல்லது அந்த உத்தியோகத்தர் ஏற்கனவே வகிக்கின்ற பதவியொன்றின் வேலைக்கு மேலதிகமான வேலையை நிறைவேற்றுவதற்காகவே செய்யப்படுகின்றது.

மேலும் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் குறித்த ஒரு பதவியில் பதில்கடமை ஆற்றுவதற்கு அப்பதவி  அவ்வுத்தியோகத்தர் தற்போது வகிக்கும் பதவியிலும் அதியுயர்ந்ததாக அல்லது அதற்கு சமனானதாக இருத்தல் வேண்டும்.

IV) வேதனம்:

பதில் நியமிப்பொன்றை வகிக்கின்ற உத்தியோகத்தர் ஒருவர் தான் அப்பதவியில் பதில் கடமையாற்றுகின்ற கருமம் காரணமாக, நிரந்தர அடிப்படையிலான அப்பதவிக்குரிய வேதன அளவுத் திட்டத்தைக் கோருவதற்கு உரிமை எதுவும் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.

V) சிறப்புரிமை அனுபவித்தல்:

குறிப்பிட்ட பதவியொன்றுக்கே உரித்தான ஏதாவது சிறப்புரிமையை அப்பதவியின் கடமைகளான பதிற்கடமையாகப் புரியும் அல்லது கவனிக்கும் உத்தியோகத்தர் அப்பதவியின் கடமைகளை பதிற்கடமையாகச் செய்யும் அல்லது கவனிக்கும் காலப்பகுதியின் போது அனுபவிக்கலாம்.

6. அரசாங்க சேவைக்கு வெளியேயுள்ள பதவியொன்றுக்கு விடுவிப்பு சம்பந்தமாக உத்தியோகத்தரொருவரினால் விண்ணப்பத்தினை நிராகரிக்கும் தத்துவம் நியமன அதிகாரிக்கு உள்ளது. அவ்வாறு நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்கள் பத்தைக் குறிப்பிடுக.

7. அலுவலகச் செயற்பாட்டுக் கைநூல்கள் ஐந்தினையும் குறிப்பிடுக.

8. அலுவலக செயற்பாட்டுக் கைநூல்களைப் பயன்படுத்துவதனால் அலுவலகத்தில் கிடைக்கத்தக்க நன்மைகள் ஐந்தைக் குறிப்பிட்டு, அவற்றைச் சுருக்கமாக விவரிக்குக.

9. சரியான கோப்பு முறைமையொன்றில் இருக்க வேண்டிய குணாதிசயங்களை விளக்குக.

10. தாபனக் கோவையின் XLVIII ஆம் அத்தியாயத்தின் முதலாம் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள குற்றங்களுக்குரிய தண்டனைகள் ஐந்தினைக் குறிப்பிடுக!

11. குடியியல் அல்லது குற்றவியல் வழக்கொன்றின் முடிவின்போது அவ்வழக்குக்கு ஏற்பட்ட செலவினை மீளளிக்குமாறு அரசாங்க உத்தியோகத்தரொருவர் கோருவாராயின் அதன் பொருட்டு தாபனக் கோவையின் XI ஆம் அத்தியாயத்தின் 2ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளை எடுத்துக்காட்டுக.

12. ஒருங்கிணைந்த கோப்பு முறைமையினை அறிமுகப்படுத்தி, அதிலுள்ள அனுகூலங்களையும் பிரதிகலங்களையும் விவரிக்குக.

SLTS III EB Paper & Answer

No comments:

Post a Comment