Wednesday, December 7, 2022

நிகழ்த்துகை மின்னரசாங்கம் வரைபு வடிவமைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான மாதிரி வினாப்பத்திரம் விடைகளுடன்








Answer

பின்வரும் கூற்றுக்கள் சரியாயின் (√) எனவும் பிழையாயின் (X) எனவும் அடையாளமிடுக.

1 ஒளிப்பேனா ஒரு சுட்டும் சாதனமாகும் (√)

வலைக்கமரா ஒரு வெளியீட்டுச் சாதனமாகும் (X)

கட்டுப்பாட்டு அலகு CPU இன் ஒரு பகுதியாகும் (√)

கணித மற்றும் தர்க்க ரீதியான வேலைகளை நினைவகம் செய்கிறது (X)

கணினியை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் “உத்தரவாத காலம்” என்பது ஓர் தொழிநுட்பம் சார் விடயமாகும் (√)

கணினியில் உள்ளீடு செய்யப்படும் தகவல்கள் தரவுகளாக வெளியீடு செய்யப்படுகின்றன (X)

மின்சாரம் நிறுத்தப்பட்டவுடன் தற்போக்கு பெறுவழி நினைவகத்திலுள்ள தரவுகள் அழிந்துவிடும் (√)

திடீரென மின்சாரம் நிறுத்தப்பட்டவுடன் கணினியின் இயக்கநிலையை குறிப்பிட்ட நேரத்திற்கு தொடர்ச்சியாக பேணுவதற்கு CPU பாவிக்கப்படுகிறது (X)

HDMI துறையானது பல்லூடக எறிவையை (Projector) கணினியுடன் தொடுக்கப் பயன்படுகிறது (√)

“கணினிச் செய்நிரலை அபிவிருத்தி செய்தல்” மென்பொருள் பொறியிலாளரின் கடமையாகும் (X.)

II. விரிதாள் மென் பொருளில் பயன்படுத்தப்படும் வரைபு வகைகள் மூன்றின் பெயரை தருக?

நிரல் வரைபு

சலாகை வரைபு

கோட்டு வரைபு

வட்டவரைபு

சிதறல் வரைபு

2. I. கீழே 1 தொடக்கம் 10 வரையான வசனங்களில் உள்ள இடைவெளிகளுக்கு பொருத்தமான சொற்களை தரப்பட்டுள்ள சொற் தொகுதியிலிருந்து தெரிவு செய்து இடைவெளிகளை நிரப்புக.

முறைவளியாக்கியின் கதி GHz மூலம் அளக்கப்படும்.

வன்வட்டின் கொள்திறனை அளக்க TB எனும் அலகு பயன்படுத்தப்படும்.

உத்தரவாத காலம் அதிகமாகவுள்ள கணினிகளின் விலை பொதுவாக கூடவாகும்.

கணினியின் தெரிவிப்பியை தெரிவு செய்யும் போது அதன் கட்புல அளவு கூடவாகவும் ஆகவும் மின்பாவனை குறைவு ஆகவும் காணப்படுவது சிறந்ததாகும்.

பிரதான நினைவகத்தின் கொள்கிறன் வன்வட்டின் கொள்திறனை விட குறைவு

பிரதான நினைவகத்தின் கொள்கிறன் GB மூலம் அளவிடப்படும்.

மொடம் Modem ஒரு தொடர்பாடல் சாதனம் (Communication) ஆகும்

இறுவட்டு ஒரு வெளிச்சேமிப்பு சாதனமாகும்.

வட்டுப்பிரிவிடல் பாகங்களின் கொள்திறன்களின் கூட்டுத்தொகையை கணிப்பதன் மூலம் வன்வட்டின் இன் கொள்திறனை பெற்றுக் கொள்ள முடியும்.

DOS ஒரு பணிச்செயல் முறைமை ஆகும்.

II. கணினியின் முதல் நினைவகம் மூன்று வகைப்படும் அவற்றை குறிப்பிடுக.

தற்போக்கு பெறுவழி நினைவகம் (RAM)

வாசிப்பு மட்டும் நினைவகம் (ROM)

பதுக்கு நினைவகம்

I கீழே தரப்பட்டுள்ள அட்டவணையானது சொல்முறைவழிப்படுத்தல் ஆவணமொன்றை வடிவமைப்பதற்கு முன்னரும் வடிவமைத்தற்கு பின்னரும் உள்ளதாகும்.

மேலே 1 தொடக்கம் 4 வரையன வடிவமைப்புக்களுக்கு பிரயோக்கப்பட்ட கருவிகள் கீழே A தொடக்கம் J வரையான எழுத்துக்களால் தரப்பட்டுள்ளன. இதிலிருந்து 1 தொடக்கம் 4 வரையான வடிவமைப்புக்களுக்கு பொருத்தமான கருவிகளுக்கான எழுத்துக்களை குறிப்பிடுக

  1. A, E, I
  2. A, J
  3. A, B
  4. A, F

II. கணினித் துறையில் பயன்படுத்தப்படும் சுட்டுச்சாதனங்கள் மூன்றின் பெயர் தருக?

சுட்டி Mouse

தொடுதிரை Touch Screen

இயக்குப்பிடி Joy stick

ஒழிப்பேனா Light Pen

III கணினிகளில் பயன்படுத்தப்படுகின்ற மொடம் (Modem) மூன்று வகைகளை குறிப்பிடுக.

  1. அகநிலை மொடம் (Internal)
  2. புறநிலை மொடம் (External)
  3. கம்பியில்லா மொடம் (Wireless)

4. I. மின்னரசாங்கம் (e Government) என்பதால் கருதப்படுவதென்ன?
ஓர் அரசாங்கம் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பவியலைப் பயன்படுத்தி தனது நாட்டின் பிரசைகளுடனும், கம்பனிகளுடனும், வேறு அரசாங்கங்களுடனும் தொடர்புகளை பேணல்

II. மின்னரசாங்கத்தின் சேவைகள் எவை?

  1. பிரஜைகளுக்கு (Government to Citizens) – G2C
  2. வேறு அரசாங்கங்களுக்கு (Government to Government) – G2G
  3. வியாபாரங்களுக்கு (Government to Business) – G2B
  4. தொழிலாளர்களுக்கு (Government to Employee) – G2E

IV. இலங்கை அரசாங்கத்தின் மின்னரசாங்கத்துடன் தொடர்புபட்ட மூன்று வலைத்தளங்களை குறிப்பிடுக.

இலங்கை அரசாங்ஙகத்தின் வலைப்பக்கம்

அரசாங்க தகவல் நிலையம்

தகவல் தொடர்பாடல் தொழிநுட்பவியல் நிலையம் ICTA

5. I. மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய சேவைகள் நான்கினை குறிப்பிடுக.

மின்னஞ்சல் பெற்றுக் கொள்ளல்

பெற்றுக்கொள்ளப்பட்ட மின்னஞ்சலுக்கு பதில் அனுப்புதல் Replay

புதிதாக மின்னஞ்சல் அனுப்புதல் Compose

நிகழ்வொன்றை மாற்றமின்றி வேறொருவருக்கு அனுப்புதல் Forward

II. பின்வருவனபற்றி சுருக்க குறிப்பு எழுதுக.

பணித்தாள் (Work Sheet)
இருபரிமாணத்தளத்தில் நிரல்கள் (Columns) மற்றும் நிரைகள் (Rows) என்றவாறு அமையப்பெற்ற கலங்களின் தொகுப்பு பணித்தாள் எனப்படும். இவை பணித்தாள் தத்தல்கள் மூலம் வெளிக்காட்டப்படுகின்றன.

பணித்தாள் புத்தகம் (Work book)
பல பணித்தாள்களுடன் கூடிய ஒரு கோப்பு பணித்தாள் புத்தகம் என அழைக்கப்படுகிறது.

இடத்துரிப் பரப்பு வலையமைப்பு (Local Area Network)
ஒரு கட்டிடத்தின் ஓர் அறையில் அல்லது சில அறைகளை இணைத்து நிறுவப்படும் கணினி வலையமைப்பு இடத்துரிப் பரப்பு வலையமைப்பு எனப்படும். பொதுவாக அலுவலகங்களில் அமைக்கப்படும்.

மையமுறைவழியாக்க அலகு
கணினித் தொகுதியின் அடிப்படை அம்சம் மைய முறைவழியாக்க அலகாகும். கணினியின் மூளையாக அழைக்கப்படும் மைய முறைவழியாக்க அலகு கட்டளைகளுக்கேற்பத் தொழிற்படும் அதேவேளை இது பணிசெயல் முறைமையும் (Operating) பிரயோக மென்பொருளையும் (Application software) முகாமை செய்கிறது.

பல்லூடக எறிவை
ஒரே தடவையில் பலர் இரசிக்கத்தக்க அகன்ற திரை தகவல்களை வெளியிட வேண்டியபோது பயன்படுத்தப்படும் கருவி பல்லூடக எறிவையாகும். ஆசிரியர்கள் கற்பித்தல் ஊடகமாகப் பயன்படுத்தத்தக்க முன்வைப்புகளைக் காட்டுவதற்கும் வியாபாரக் கூட்டங்களை நடத்துவதற்கும் பொழுது போக்கிற்காக ஒளியுருக் காட்சிகளை இரசிப்பதற்கும் பயன்படுத்தப்படும் இச்சாதனத்தைக் கணினித் தொகுதியுடன் இணைப்பதன் மூலம் ஓர் அகன்ற திரை மீது தேவையான தகவல்களை வெளியிடலாம்.

No comments:

Post a Comment