கடை, அலுவலக ஊழியர் சட்டத்தின் நோக்கம் யாது?
இச் சேவையில் உள்ள ஊழியர்களுக்குச் சேவை வசதிகளை ஏற்படுத்தியளித்தல், சேவைக் காலத்தை (நேரத்தை) நிர்ணயித்தல், மேலதிகச் சேவைக்கான கொடுப்பனவு, (Over time payments) சம்பளச் சட்ட திட்டங்கள் அத்துடன் பெண் ஊழியர்களுக்கான மகப்பேற்றுச் சிகிச்சை வசதிகள் போன்றவற்றை பெற்றுக் கொடுத்தல்,
கடை, அலுவலக ஊழியர் சட்டத்தின் படி கடை (shop) என்பது எவற்றை குறிக்கிறது?
கடை, அலுவலக ஊழியர் சட்டத்தின் படி அலுவலகங்கள் எனக் கருதப்படும் இடங்கள் எவை?
வங்கியொன்றில் Bank, காப்புறுதி Insurance தாபனமொன்றில், கப்பற் தாபனமொன்றில், நிறுவனப்படுத்தப்பட்ட தாபனமொன்றில், தோட்டப் பிரதிநிதி, போன்ற நபரொருவரின் தாபனமொன்றில் பணியாற்றுவதற்காக நடாத்தப்படும் நிறுவனங்களாகும்.
மேலும் வர்த்தக நிலையமொன்றில், தொழிற்சாலையொன்றில், தோட்டமொன்றில், சுரங்கத்தில், உணவகத்தில், ‘கிளப்’ இல், புதினப்பத்திரிகைகள், புத்தகங்கள் விற்பனை நிலையமொன்றில் நடாத்தப்படும் அலுவலகச் சேவைகளும், வைத்திய அலுவலர்கள் போன்றோரின் அலுவலகங்களும், தொழிற்சங்க அலுவலகங்கள், தனியார் பாடசாலைகளின் (School) அலுவலகங்கள், அரச, அரசு சாராத கூட்டுத்தாபனங்களும் இதில் அடங்கும்.
கடை, அலுவலக சேவையில் அமர்த்தப்படுவதற்கான குறைந்த வயது என்ன?
16 வயதுக்குக் குறைந்த எவரும் கடை அல்லது அலுவலகமொன்றில் சேவையில் அமர்த்தப்படுதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
கடை, அலுவலக ஊழியர் இச்சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊழியர் வேலை நேரங்கள்; என்ன?
ஒரு நாளில் (ஒரு மணிநேர உணவு நேரத்தைத் தவிர) 8 மணித்தியாலயங்கள். .
கிழமையில் ஒரு நாளில் ஓய்வு நேரம் தவிர 5 மணித்தியாலங்கள்.
கிழமைக்கு 45 மணித்தியாலயங்கள். .
18 வயதுக்குக்குட்பட்ட பெண்களும் 16 வயதுக்குக்குட்பட்ட ஆண்களும் மாலை 6.00 மணி தொடக்கம் காலை 6.00 மணிவரை சேவையில் ஈடுபடுத்தப்பட முடியாது.
18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரவு 8.00 மணி வரை எந்தவொரு கடையிலும் அல்லது அலுவலகத்திலும் சேவைக்கு அமர்த்தப்படலாம்,
18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரவு 10.00 மணிவரை உணவகமொன்றில் சேவையில் அமர்த்தப்படலாம்.
18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வதிவிட உணவகங்களில் தொலைபேசிப் பணியாளர்களாகவும் Telephone Operator, வரவேற்பாளர்களாகவும், பெண் தலைவர்களாகவும், விமான நிலைய அலுவலகமொன்றில் இரவில் தரையில்; சேவையில் அமர்த்தப்பட அனுமதியுண்டு. .
16 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் உணவகமொன்றிலும், களியாட்ட மண்டபத்திலும் இரவு 10.00 மணி வரை சேவையில் அமர்த்தப்படலாம்.
கடை, அலுவலக ஊழியர் இச்சட்டத்தின்படி மேலதிக நேரம் எவ்வாறு கணிக்கப்படும்?
நாளொன்றுக்கு அல்லது வாரமொன்றுக்கு விதிக்கப்பட்ட பொதுவான சேவைக் காலத்துக்கு மேலதிகமாகன எல்லா வேலை நேரமும் மேலதிக வேலை நேரமாகக் கருதப்படும். .
இதற்கான கொடுப்பனவு ஒரு மணி நேரத்துக்கான சம்பளத்தைப் போன்று ஒன்றரை மடங்காகும்.
மாதம் சம்பளம் X1 1/2
240
மேலதிக வேலை நேரம் வாரமொன்றிற்கு ஆகக்கூடியது 12 மணிநேரமாகும்.
கடை, அலுவலக ஊழியர் இச்சட்டத்தின்படி விடுமுறை காலம் எவ்வளவு?
வார விடுமுறைகள் (சட்டத்தின் 5ம் பிரிவு)
மேலதிக நேர வேலை தவிர வாரமொன்றுக்கு 28 மணி நேரத்திற்குட்பட்ட நேரம் சேவையாற்றியவர் சம்பளத்துடன் ஒன்றரை நாள் வார விடுமுறை பெற தகுதியுடையவர்.
வருடாந்த விடுமுறை
முழுச் சம்பளத்துடன் வருடமொன்றிற்கு 14 நாட்களாகும். வேலைக்குச் சேர்ந்த முதல் ஆண்டில் இதற்கான உரித்து இல்லையெனினும் அவ்வாண்டில் வேலைக்கு சேர்ந்தது.
ஏப்பிரல் முதலாம்; திகதிக்கு முன்னர் எனின் 14 நாட்களும் யூலை முதலாம் திகதிக்கு முன்னர் எனின் 10 நாட்களும் ஒக்டோபர் முதலாம் திகதிக்கு முன்னர் எனின் 07 நாட்களும்.
ஒக்டோபர் முதலாம்; திகதிக்கு பின்னர் எனின் 04 நாட்களும் 2ஆம் ஆண்டில் பெற்றுக்கொள்ள முடியும்.
அதன் பின் ஒவ்வொரு ஆண்டிலும் 14 நாட்கள் விடுமுறை வழங்கப்படும்.
ஆண்டொன்றிற்கான அமய விடுமுறை நாட்கள் 07 ஆகும்.
பகிரங்க விடுமுறை நாளொன்றில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கொடுப்பனவு எவ்வாறு வழங்கப்படும்?
அவ்விடுமுறை நாளுக்குப் பதிலாகச் சம்பளத்துடனான வேறு ஒரு விடுமுறை நாளினை டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் வழங்குதல் அல்லது அன்று வேலை செய்ததற்குச் சமமான சம்பளத்தைப் போன்று இரு மடங்கு சம்பளத்தை வழங்குதல் வேண்டும்.
முழு நோன்மதி தினமொன்றில் வேலைசெய்யும் தொழிலாளருக்கு சம்பளம் எவ்வாறு வழங்கப்படும்?
பொதுவான தினமொன்றின் சம்பளத்தைப் போன்று ஒன்றரை மடங்கினை வழங்குதல் வேண்டும்.
கடை, அலுவலக ஊழியர் இச்சட்டத்தின்படி ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நலன்புரி வசதிகள் எவை?
போதியளவு வெளிச்சம் காற்றோட்ட வசதி,
ஆண், பெண் இருபாலாருக்குமான வௌ;வேறான மலசல கூட வசதிகள்
உணவு உட்கொள்வதற்காகப் பொருத்தமான இடவசதிகள்
சேவையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு உட்காருவதற்கான இருக்கைகள் ஆகக்குறைந்தது மூன்று பெண்களுக்கு ஒன்று வீதம் இருத்தல் வேண்டும்.
கடை, அலுவலக ஊழியர் இச்சட்டத்தின்படி பெண் அலுவலர்களுக்கு வழங்கப்படும் பிரசவ விடுமுறையும் வசதிகளும் எவை?
ஒவ்வொரு பெண் ஊழியருக்கும் மகப்பேற்றின் விளைவாக உயிருள்ள குழந்தை ஒன்று கிடைக்குமானால் அவரது மகப்பேற்று தேதியன்று தொடங்கி 70 நாட்களுக்கு ; அத்துடன்
மகப்பேற்றில் உயிருள்ள குழந்தை, கிடைக்கவில்லையாயின் மகப்பேற்று தேதியன்று தொடங்கி 28 நாட்களுக்கும், லீவு பெறுவதற்கு உரிமையுண்டு .
ஏதேனும் கடை அல்லது காரியாலயத்தில் பெண் ஊழியர் ஒரு வயதிற்குட்பட்ட குழுந்தை ஒன்றிற்கு அவள் தாய்ப்பால் ஊட்டுவதாயின், அத்தகைய நேரங்களில் இரண்டு தாய்ப்பால் ஊட்டும் கால இடைவெளிகளை அவளுக்கு தொழில் தருனர் அனுமதித்தல் வேண்டும்.
ஒரு குழந்தைப் பராமரிப்பு நிலையம் குழந்தைக்கு தாயப்பால் ஊட்டுவதற்காக தொழில்தருநரால் வழங்கப்பட்டிருக்குமிடத்து, ஒரு கால இடைவெளி முப்பது நிமிடங்களுக்குக் குறையாமல் இருத்தல் வேண்டும் என்பதுடன், அவ்வாறு வழங்கப்பட்டிருக்காவிடத்து, ஒரு மணித்தியாலத்திற்குக் குறையாமல் இருத்தல் வேண்டும்;
பிரசவத்திற்கு 3 மாதங்களுக்கு முன்னரும் பிரசவத்தின் பின்னரும்; குழந்தைக்கு அல்லது தாய்க்கு பங்கம் விளைவிக்கக்கூடிய வேலைகள் வழங்குவது தடையாகும்.
பிரசவம் அல்லது குழந்தை கருக்கட்டல் காரணமாக ஏற்படக்கூடிய நோய் தொடர்பாக சேவையிலிருந்து நீக்கமுடியாது.
பிரசவ விடுமுறையில் இருக்கும் கால இடைவெளியில் வேலை நீக்கம் செய்தல் தொடர்பான அறிவித்தல் வழங்க முடியாது.
கடை. அலுவலக ஊழியர் சட்டம் ஏற்புடைத்தாகும் ஊழியர்களின் சம்பளம் எவ்வாறு நிர்ணயிக்கப்படும்?
நான்கு பேருக்கு மேற்பட்ட தொகை ஊழியர்கள் பணியாற்றும் மொத்த சில்லறை வியாபாரத்தைப் பொறுத்தவரையிலும் ஊழியர்கள் 10 பேர் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையினர் பணியாற்றும் உணவகங்கள், போசனசாலைகளின் ஊழியர்களுக்காகவும் சம்பளச் சபைச் சட்டத்தின் கீழ் சம்பளம் விதிக்கப்பட்டுள்ளது.
பிற கடை, அலுவலக ஊழியர்களுக்காக தொழில் தருனர் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின்; இணக்கத்தின் பேரில் சம்பளம் நிர்ணயிக்கப்படும்.
கடை. அலுவலக ஊழியர் சட்டத்தில் ஊழியரின் விருப்பப்படி மேற்கொள்ளப்படக்கூடிய குறைப்பனவுகள் எத்தனை வீதம்?
60% க்கு மேற்படலாகாது. குறைக்கப் படக்கூடிய விடயங்கள்
- உணவுப் பொருட்களின் பெறுமதியும் வதிவிடக் கட்டணமும்.
- தொழில் தருநரால் வழங்;கப்பட்டுள்ள வீட்டின் கட்டணங்கள்
- தவணைக் கட்டணங்கள்
- ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட வேறு வசதிகளுக்கான கட்டணங்கள்.
- பணியாற்றும் வர்த்தக நிலையத்தினால் அவருக்கு விற்கப்படும் பொருட்களின் விலை.
- தண்டம் (5%க்கு மேற்படலாகாது).
- தொழில் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதியம், சேமலாப நிதி, காப்புறுதி, போன்றவற்றிற்கான பணம்
- தொழில் தருநரால் கொடுக்கப்பட்ட கடன் அல்லது சம்பள முற்பணத்துக்கான வட்டி Interest போன்றன
No comments:
Post a Comment