Saturday, April 9, 2022

திணைக்களங்களின் செயற்பாடுகள் வினாவிடைகள்

பிசுக்கால் கொள்கை பொருளியல் விவகார திணைக்களத்தின் செயற்பாடுகளை குறிப்பிடுக. 


1) பாதீட்டு நிலைமைகளை மீளாய்வு செய்தல்:

அ. பாதீட்டு விளைவு ஆய்வு

ஆ. வருமான மாற்றங்களால் பாதீட்டு விளைவு

இ) ச.நா. நி க்கான நிதி சம்பந்தமான புள்ளி விபரங்களை தயாரித்தல்

2. பணப்பாய்ச்சலை கண்காணித்தல்

3. சுங்கத் தீர்வை Custom tax புரள்வு வரிகள் கலால் வரிகள் ஆகியவற்றையும் விசேட சந்தர்ப்பங்களில் ஏற்றுமதி வரியையும் ஏற்றுமதியாளர்களுக்கு மீளளித்தல்

4. சுங்கச் சட்டத்தின் கீழ் சுங்க சுங்க வரியை விட்டுவிடுதலும் அங்கீகாரத்தைப் பெறலும்.

5. வரி விடுமுறைக்கும் வரிச்சலுகைக்குமான அங்கீகாரத்தை வழங்கல்

6. அரசாங்க ஒப்பந்தத்தை கௌரவிக்கும் பொருட்டு தீர்வையையும் வரியையும் மீளளித்தல்

7. அரசின் பொருளாதார கொள்கைகளின் செயற்பாட்டினை பொதுவாக தயாரித்தலும் ஆலோசனை வழங்கல் மேற்பார்வை செய்தலும்

8, நாணய வங்கி நிதி நாணயமாற்றுக் கட்டுபாடு கொள்கைகளில் மத்திய வங்கியுடன் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

9. உள்ளூர் சர்வதேச பொருளாதார போக்கினையும் அவை தேசிய சமூக பொருளாதார நோக்கங்களால் ஏற்படுத்தும் தாக்கத்தினையும் தொடர்ச்சிகயான ஆய்வுக்கு உட்படுத்தல்

10. சர்வதேச பிராந்திய பொருளாதார நிதி நிறுவனங்களுடன் தொடர்பினை அபிவிருத்தி செய்தல், 

11. சர்வதேச வியாபார கொடுப்பனவுகள் சர்வதேச நாணய முறைமை சம்பந்தமான விடயங்களில் ஈடுபடுத்தல்

12. உள்ளூர் தொழிற் துறைகளையும் சர்வதேச வர்த்தகத்தினையும் முன்னேற்றுவதில் ஒத்தாசை செய்தலும் ஊக்குவித்தலும்

13. நுகர்வோர் நலன்களை பாதுகாத்தல் சம்பந்தமாக எடுக்கப்படும் வரி, வரி சம்பந்தப்படாத நடவடிக்கைகளில் அரசுக்கு ஆலோசனை வழங்கலும்,

பொது நிறுவனங்களுக்கான திணைக்களத்தின் செயற்பாடுகள் எவை?

பொது வளங்கள் தொடர்பான தரவுகளையும் முகாமைத்துவ தரவுகளையும் பேணுவதுடன் பருவ கால அறிக்கைகளையும் கைநூல்களையும் பொது நிறுவனங்கள் சம்பந்தமான மதிப்பீட்டு அறிக்கைகளையும் வெளியிடுவதற்கு பொறுப்பாக் இருந்து வருகின்றது.

அரசாங்க திணைக்களங்களினதும் அமைச்சுகளினதும் முற்பணக் கணக்கு முயற்சிகள் சம்பந்தமான மீளாய்வுகளை மேற்கொள்ளலும் திணைக்களத்தின் நடவடிக்கைகளில் அமைந்துள்ளது.

இதன் தொழிற்பாடுகளும் செயற்பாடுகளும் வருமாறு:

1. பின்வரும் வற்றின் பாதீட்டை ஆய்வு செய்தலும் அவற்றின் செயற்பாட்டினை கண்காணித்தலும்

அ. அரச கூட்டுத்தாபனங்கள்

ஆ. சட்ட நியதியான வியாபார நிறுவனங்கள்:

இ. அரசவுடைமையான வியாபார நிறுவனங்கள்:

2. பொது நிறுவனங்களுக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு உதவி புரிதல்

3. பொது நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் சம்பந்தமான நாணய விவகாரங்களுக்கான அமைச்சரவை உப குழுவுக்ககு உதவி செய்தல்

4. பொது நிறுவனங்கள் சபைகள் தொடர்பான நிதிப்பிரமாணங்களும் கணக்குகளும்.

5. கூட்டுத்தாபனங்களுக்கு சேரவேண்டிய நிலுவைகளைத் தீர்த்தல்

6. 1971 ஆண்டு 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் படி அங்கீகாரம் அளித்தலும் ஒருமைப்பாடும்

7. 1971 ஆண்டு 38ஆம் இலக்க நிதிச்சட்டத்திலிருந்த விதிவிலக்கு அளித்தல்

8. வியாபார களஞ்சிய முற்பணக்கணக்குகளில் எல்லைகளை தீர்மானித்தலும் மீள நிர்ணயித்தலும் அவற்றின் செயற்பாட்டை கண்காணித்தலும்

9. அரச ஊழியர் முற்பணக்கணக்குகளின் எல்லைகளை நிர்ணயித்தலும் மீள நிர்ணயித்தலும்

10. அரச கூட்டுத்தாபனங்களினதும் சபைகளினதும் அரசுக்கு சொந்தமான வியாபார நிறுவனங்களினதும் போணஸ் கொடுப்பனவுகள் உள்ளடக்கிய பல வகைப்பட்ட தனிப்பட்ட விடயங்களில் ஈடுபடல்

No comments:

Post a Comment