பொது ஆணைச்சீட்டு General Warrant வழங்கப்படுவதற்கான நோக்கம் என்ன?
ஆண்டு மதிப்பீட்டிலும் ஒதுக்கீட்டதிகாரச்சட்டத்திலும் 1ம் பகுதியில் ஏற்படுத்திய வழங்கல் சேவையின் காரணமாக திரட்டு நிதியிலிருந்து செலவு செய்வதற்கான அதிகாரத்தை பொது ஆணைச்சீட்டு வழங்குகிறது.
இவ்வாணைச்சீட்டின் மூலம் அமைச்சரவை எந்தவிதமான கட்டுப்பாட்டையும் வைத்திருக்க விரும்புவதில்லை. எந்தச் சேவைகளுக்காக பொது ஆணைச்சீட்டு வழங்கப்படுகின்றதோ அச்சேவைகள் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணையில் விதிக்கப்பட்டிருக்கும்.
நி.பி 502 இன்படி முற்பணக்கணக்கு பதிவுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும்?
1) உயர் கொடுப்பனவு எல்லை
அ. பொதுவாக படிவம் பொது 138அ உரிய திருத்தங்களுடன் பயன்படுத்தலாம்
ஆ. முற்பணக்கணக்கில் செய்யப்படும் வரவுகளின் பதிவானது குறிப்பிட்ட நிதியாண்டில் ஏற்படும் செலவினத்தின் உச்ச எல்லையை கணிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்படலாகாது.
2) இழிவுப் பெறுவனவு எல்லை
அ. பொதுவாக படிவம் பொது 138அ உரிய திருத்தங்களுடன் பயன்படுத்தலாம்
ஆ. வரவுகளின் ஆக்ககுறைந்த எல்லையை கணிப்பதற்கு முற்பணத்தில் செய்யப்படும் வரவுகளின் பதிவு எடுத்துக்கொள்ளப்படும்.
கைமாற்றல் முறைக்கணக்குகள் எவ்வாறு கையாளப்படுகின்றன? நிபி 296
டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர்
“அ” வகுப்பு திணைக்களங்கள் “ஆ” வகுப்பு திணைக்களங்கள் கைமாறறல் கொடுப்பனவுகளை தமது ஏடுகளில் பதிவ செய்து மாதாந்தக் கணக்குப் பொழிப்புகளில் Monthly summary சேர்த்து கைமாற்றல் கொடுப்பனவு படிவம் பொது 122 இல் தயாரித்து திறைசேரிக்கு அல்லது கச்சேரிக்கு அனுப்பும்
டிசம்பர் 31ம் திகதிக்கு பின்னர்
செப்டெம்பருக்குரிய தமது கணக்குகளின் பொழிப்புகளில் இணைத்து நிபி 429 இல் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் கைமாற்றல் கொடுப்பனவு படிவம் பொது 122 இல் தயாரித்து டிசம்பர் 31ம் திகதியிட்டு திறைசேரிக்கு அனுப்பும்.
கைமாற்றல் முறைக் கொடுப்பனவு மூலம் தீர்க்கப்படக் கூடிய கொடுப்பனவு பட்டியல்களை குறிப்பிடுக.
வரைபு மதிப்பீடுகளில் புதிய முற்பணக்கணக்கு ஒன்றை உருவாக்குதல் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது? – நிபி 39
1) குறித்த நோக்கத்துக்கு பொதுத் தொழில் முயற்சிகள் பணிப்பாளர் அதிபதியின் முற்பட்ட அதிகாரம் பெறப்படுதல் வேண்டும்.
2) அதற்கான விண்ணப்பம் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரூடாக அனுப்பப்படல் வேண்டும்
3) இந்த விண்ணப்பம் ஒவ்வொரு வருடமும் ஜுலை 15ம் திகதிக்கு முன் அனுப்பப்படல் வேண்டும்.
விண்ணப்பத்தில் அடங்கும் விடயங்கள்
வழங்கல் சேவைகள் மீது குறை நிரப்பு ஏற்பாட்டை பெறுவதற்கான விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை விபரிக்க. -நிபி 74(1)
1) எதிர்பாராத சூழ்நிலைகளில் அமைச்சரவையின் பணிப்பு ஒன்றின் பேரில் செலவினம் செய்ய வேண்டிய தேவை ஏற்படும் போது
அ. அச்செலவு அவரது கட்டுப்பாட்டின் கீழ் ஏதாவது நிகழ்ச்சித்திட்டத்தின் அல்லது கருத்திட்டத்தின் சுற்றெல்லையுள் வராது இருக்கையில்
ஆ. அச்செலவு நிகழ்ச்சித்திட்டம் அல்லது கருத்திட்ட சுற்றெல்லையுள் வருகின்ற போதும் வகைமாற்ற முறையின் கீழ் செய்யமுடியாத மிகை ஒன்றை உண்டுபண்ணுகையில்
2) திணைக்களத்தலைவர் அறிக்கையை சம்பந்தப்பட்ட அமைச்சரின் செயலாளருக்கு சமர்ப்பித்தல்
3) செயலாளர் அறிக்கையை தனது கருத்துரைகளுடன் அமைச்சரிடம் சமர்ப்பித்தல்
4) குறைநிரப்பு மதிப்பீடு ஒன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அமைச்சர் கருதினால் அந்த நோக்கத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெறுதல்
5) அதன் பின்னர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கான தீர்மானம் ஒன்றை தயாரிக்குமாறு செயலாளருக்கு பணிப்பார்.
6) குறைநிரப்பு மதிப்பீட்டின் தேவையான பிரதிகளுடன் பிரேரணையும் சேர்த்து செயலாளர் பாராளுமன்றத்துக்கு அனுப்புவார்.
வகுத்தீட்டு கணக்கில் உள்ளடக்கப்பட வேண்டிய பிரதான 2 செலவீட்டு வகைகள் எவை?
1) மீண்டுவரும் செலவினங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள கருத்திட்டங்களுக்கு ஒன்றும்
2) மூலதன செலவினங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள கருத்திட்டங்களுக்கு ஒன்றும்
வகுத்தீட்டு கணக்கில் காட்டப்படும் அம்சங்கள் எவை?
உபயோகிக்கப்படாத பொருட்கள் மீதான நடவடிக்கை எவ்வாறு அமையும்? – 770
சுற்றாய்வு சபையின் அனுமதியின்றி உபயோகிக்கத்தகாத பொருட்கள் எவ்வாறு தள்ளுபடி செய்யப்படும்? – நிபி 771
பிற்போடப்பட்ட பொறுப்புக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் எவை? – 94
வரையறுத்த கேள்விகள் கோரும் நடைமுறையை சுருக்கமாக குறிப்பிடுக. -690
1) கேள்விச்சபையொன்று Tender Board சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளரின் அங்கீகாரத்துடன் குறித்த விபரம், அளவு, பெறுமானம், உடைய ஒப்பந்தகாரர்களின் பெயர்களடங்கிய பெயரேடுகள் தயாரித்து அதில் பெயருள்ளவர்களுக்கு கேள்விகள் வழங்கலாம்.
2) பெயரேடுகளில் பெயரில்லாதவர்களுக்கு அவர்களின் பெயர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பம் செய்ய இடமளிக்க வேண்டும்.
3) அமைச்சுக் கேள்விச் சபையினால் தமது மதிப்பை காட்டும் சான்றிதழ்கள் கோரப்படலாம்
4) கேள்விச் சபையொன்று சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளரின் அங்கீகாரத்துடன் குறிப்பிட்ட பொருட்களை வழங்கும் வணிக நிலையங்களின் பெயர் நிரல்களை தயாரித்து அதில் பெயருள்ளவர்களுக்கு கேள்வி அறிவித்தல்கள் வழங்கப்படும்.
5) பெருந்தொகையான கொள்வனவுகளை Purchasing மேற்கொள்வதற்கு 4 இன்படி நடவடிக்கை பொருந்தும்.
6) கிடைத்த வழங்குவோரில் பொருட்களின் உயர்ந்த தரத்தினை கவனத்திற் கொண்டு தேர்ந்தெடுத்த வணிக நிலையங்களுக்கு கேள்வி பத்திரம் வழங்க கேள்விச்சபை அதிகாரமளிக்கலாம்.
கடந்த நிதியாண்டுக்கு முந்திய நிதியாண்டுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை குறிப்பிடுக.- 115
1) இக்கொடுப்பனவு தாமதத்திற்கான பொறுப்பாளி யார் என்பது கண்டறியப்படல்
2) அவரிடம் விளக்கம் கோரப்படல் வேண்டும்.
3) அவரின் விளக்கத்துடன் கணக்கீட்டு உத்தியோகத்தரின் நேரடிக்கவனத்திற்கு கொண்டு வரப்படல் வேண்டும்.
4) விளக்கம் திருப்தியில்லாவிட்டால் குறித்த தொகையை முற்றாக அல்லது பகுதியாக அறவிட வேண்டுமா என கணக்கீட்டு உத்தியோகத்தர் தீர்மானிப்பார்
5) கணக்கீட்டு உத்தியோகத்தரால் குறித்த கொடுப்பனவு அல்லது தண்டப்பணம் தொடர்பான கடிதப்பிரதி கணக்காய்வாளர் அதிபதிக்கு அனுப்புதல் வேண்டும்.
6) கொடுப்பனவு செய்ய முன்னர் தாமதத்திற்குரிய காரணம் எவ்வாறாக இருந்த போதிலும் அது பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கவனத்திற்கு கொண்டுவரப்படல் வேண்டும்.
7) அவர் அதை 1,2,3,4,5 இன்படி கையாளுவார்.
எதிர்பாரா செலவு நிதியிலிருந்து முற்பணம் ஒன்றை பெறுவதற்கு நிதியமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் எவை?
பெரிய கருத்திட்டங்களுக்கான இறுதி அங்கீகாரம் எப்போது தேவைப்படுகிறது? – நிபி 36
வரைவு மதிப்பீடுகள் தொடர்பாக திறைசேரியின் தீர்மானங்கள் எவை?- 57
1) திறைசேரியானது உரிய செயலாளர்கள், திணைக்கள தலைவர்களுடன் உசாவுகை மேற்கொண்டு வரவு செலவு மதிப்பீடுகளை பரிசீலனை செய்தல்
2) அதன் பின்னர் தனது தீர்மானங்களை அந்தந்த செயலாளர்களுக்கும், திணைக்கள தலைவர்களுககும் அனுப்பி வைக்கும்.
3) அதன் பின்னர் திறைசேரி தனது தீர்மானங்களை வரைவு மதிப்பீட்டில் சேர்த்துக் கொள்ளும்.
4) அதன் பின்னர் எந்த திருத்தங்களையும் திறைசேரி ஏற்றுக் கொள்ளாது
5) அதன்பின் வரைவு மதிப்பீடுகள் அங்கீகாரம் பெறும்பொருட்டு அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்படும்
6) திறைசேரி அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்ற பின்னர் அச்சிடுவதற்காக அதனை அரசாங்க அழுத்தகருக்கு அனுப்பி வைக்கும்
கணக்கீட்டு உத்தியோகத்தரால் தயாரிக்கப்படும் நட்டங்கள் சம்பந்தமான அறிக்கையில் அடங்க வேண்டிய விடயங்கள் எவை?
1) நிதியாண்டில் திணைக்களத்தால் கையாளப்பட்ட நட்டங்கள் தொடர்பான விபரம்
2) இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ள முன்னய நிதியாண்டுகளின் நட்டங்கள்
அரசிறைக்கான மீளளிப்புக்கு விண்ணப்பம் செய்யும் போது திணைக்களம் கவனிக்க வேண்டிய விடயங்கள் எவை?- 118(3)
திணைக்கள சுற்றாய்வு சபை நியமனம் யாரால் வழங்கப்படுகிறது?- நிபி 756
1) இருப்புபொருள் முற்பண கணக்குகளில் வைத்திருக்கப்படும் உபயோகிக்கத்தகாத இருப்பு பொருட்கள் – பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர்
2) பிற விடயங்கள் யாவற்றிலும் – கணக்கீட்டு உத்தியோகத்தர்
திணைக்கள சுற்றாய்வு சபையின் அமைப்பு எவ்வாறிருக்கும்? – 756(2)
1) சபை உறுப்பினர்கள் இருப்பு பொருட்களுக்கு நேரடியாக பொறுப்புக் கூறும் உத்தியோகத்தராகவோ, அன்றேல் இவர்களுக்கு கீழமைந்த அலுவலராகவோ இருத்தலாகாது.
2) ஒரு உறுப்பினர் ஒப்பாய்வு செய்வதற்குத் தொழிநுட்ப இருப்பு பொருட்கள் எவையாயினும் இருந்தால் அவற்றுடன் தொடர்புடையவராக இருத்தல் வேண்டும்.
No comments:
Post a Comment