தரம் III முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப் பரீட்சைக்கு கற்றுக்கொள்ளும் வகையில் கடந்தகால வினாப்பத்திரம் நிதி நடைமுறைகள் (Financial Regulation) விடைகளுடன் கீழே தரப்பட்டுள்ளது.
Efficiency bar Examination for officers in Grade III Management Service Officer
(i) நிதிப்பரிபாலனம் சம்பந்தமாக அதிகார கையளிப்பின் போது (Power Delegation) செலவினம் சம்பந்தமான அதிகாரக்கையளிப்பு சந்தர்ப்பங்கள் எவை?
(ii) கொடுப்பனவு செய்வதற்கு அதிகாரம் உடைய உத்தியோகத்தர்களுக்கு உள்ள பொறுப்புகள் வாய்ந்த விடயங்கள் ஆறைக் குறிப்பிடுக.
(iii) காசோலை மூலம் கொடுப்பனவு செய்யும்போது கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் இரண்டை குறிப்பிடுக.
1) வங்கியிலுள்ள மீதி (Bank Balance) கொடுப்பனவை மேற்கொள்ள போதுமானதாக இருத்தல்
2) காசோலை இலக்கம் கொடுப்பனவு உறுதிச்சீட்டில் குறிக்கப்பட்டிருத்தல்
(iv) “வங்கிக் கணக்கு இணக்கக்கூற்று’ என்றால் என்ன என்பதை சுருக்கமாக விளக்குக.
ஒரு திணைக்களத்தின் காசுப்புத்தக மீதியும் வங்கியினால் மாதாந்தம் அல்லது குறிப்பிட்ட காலத்தில் அனுப்பி வைக்கப்படும் வங்கிக் கூற்று மீதியும் சமமாக இருப்பதில்லை.
அதற்கான காரணங்களை கண்டறிந்து இரண்டு மீதிளையும் இணக்கம் செய்வதற்காக தயாரிக்கப்படும் கூற்று வங்கிக்கணக்கிணங்கக் கூற்று (Bank Reconciliation) எனப்படும்.
2. (1) அகக் கணக்காய்வுக் கூறு ஒன்றின் நோக்கங்கள் இரண்டை சுருக்கமாக விபரிக்குக.
1) ஒரு திணைக்களத்தின் நிதி நடவடிக்கைகளின் உள்ளகக் கட்டுப்பாட்டு முறையில் ஏற்படும் பிழைகளையும் தவறுகளையும் தடுப்பதற்கும் கண்டுபிடிப்பதற்கும் கையாளப்பட்டுள்ள உள்ளகத் தடுப்புக்கள் போதியளவு உள்ளனவோ என்றும் பரிசீலனை செய்தலும்,
2) அபிவிருத்தி வேலைகள். முயற்சிகள், செயல் திட்டங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நிச்சயிப்பதில் கணக்கிட்டு உத்தியோகத்தருக்கும் முன்னேற்றக் கண்காணிப்பு குழுவுக்கும் உதவி செய்தல்
(ii) அகக் கணக்காய்வுக் கூறு ஒன்றினால் செய்யப்படும் கடமைகள் நான்கை குறிப்பிடுக.
1) தவறுகள், மோசடிகள் என்பவற்றைத் தடுக்கும் வகையில் அகக்கட்டுப்பாடு, அகச்செவ்வை என்பன உருவாக்கப்பட்டிருத்தலை உறுதி செய்தல்.
2) கணக்கீட்டு நடைமுறைகள், பதிவேடுகள் என்பவற்றின் உண்மைத்தன்மை, கடைப்பிடிக்கப்படுதலை உறுதிப்படுத்தல்,
3) பதவியணியினர் அவர்களது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகள் மற்றும் தரத்தினை மதிப்பீடு செய்தல்.
4) அரச சொத்துக்கள் நட்டமடையாமல் பாதுகாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை உறுதி செய்தல்
5) தாபனக்கோவை, நிதிநடைமுறைகள், மற்றும் ஏனைய சுற்றறிக்கைகளின் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுதலை உறுதிப்படுத்தல்.
6) சேதமடைதல், பயனற்றிருத்தல், மேலதிகசெலவு ஆகியவற்றைக் தடுப்பதற்கு உருவாக்கப்;பட்டுள்ள உள்ளகக்கட்டுப்பாட்டு முறையின் செயல்திறனை உறுதிசெய்தல்,
7) தேவையான சந்தர்ப்பங்களில் விசேட புலனாய்வுகளை மேற்கொள்ளல்.
(iii) நிறுவனமொன்றின் அகக்கணக்காய்வாளர் நிதி மற்றும் கணக்குகள் சம்பந்தமாக அறிக்கையிட வேண்டியது யாருக்காகும்?
திணைக்களத்தலைவருக்கு நேரடியாக அறிக்கையிட வேண்டியதுடன், கணக்காய்வாளர் அதிபதிக்கு பிரதிகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
(iv) கணக்காய்வு ஐயவினா ஏட்டில் உள்ளடக்கட்பட வேண்டிய விடயங்கள் இரண்டை குறிப்பிடுக.
1) கணக்காய்வு ஐயவினா கடிதம் கிடைத்த திகதி, மற்றும் கடித இலக்கம்,
2) கணக்காய்வு ஐயவினா விபரம்,
(v) கணக்காய்வாளர் நாயகத்தின் கடமைகள் இரண்டை குறிப்பிடுக.
1) அரசாங்கத் திணைக்களங்கள், அமைச்சரவை, நீதிச் சேவைகள் ஆணைக்குழு, அரச சேவைகள் ஆணைக்குழு. நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர். தேர்தல் ஆணையாளர், உள்ளூர் அதிகார சபை, அரச கூட்டுத்தாபன அலுவலகங்கள் சகலதினதும் கணக்குகளையும் கணக்காய்வாளர் அதிபதி கணக்காய்வு செய்வார்.
2) சட்டப்படி பாராளுமன்றத்தினால் விதிக்கப்படக்கூடிய கடமைகள் பணிகளையும் கணக்காய்வாளர் அதிபதி நிறைவேற்ற வேண்டும்.
(1) திணைக்களமொன்று தனது மாதாந்த கணக்குப் பொழிப்பில் உள்ளடக்கவேண்டிய பிரதான கணக்கு வகைகள் நான்கைக் குறிப்பிடுக.
(ii) வருடாந்த செலவினத்துக்கான நகல் மதிப்பீட்டை அமைச்சு ஒன்று யாருக்கு சமர்ப்பிக்க வேண்டும்?
தேசிய வரவு செலவுத்திட்டப் பணிப்பாளர் அதிபதிக்கு (நி.பி 56)
(iv) அரச திணைக்களமொன்றுக்கு புதிய வங்கி கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை சுருக்கமாக விபரிக்குக.
திணைக்களத்தினால் வங்கி கணக்கு திறக்கும் விண்ணப்பமானது பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் ஊடாக திறைசேரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். கணக்கு திறப்பதற்கான தேவையை விளக்கி பின்வரும் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
திறைசேரியால் விண்ணப்பம் அனுமதிக்கப்பட்டு வங்கிக்கு அனுப்பப்படும்.
(v) அரச திணைக்களமொன்றுக்கு வங்கி மேலதிகப் பற்று பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளதா?
இல்லை
(vi) வருட இறுதியில் அரச திணைக்களமொன்றினால் தயாரிக்கப்படும் இறுதிக்கணக்குகள் என்ன பெயரால் அழைக்கப்படும்?
வருடாந்த கணக்கு பொழிப்பு
https://youtu.be/CXxrJLjRZbQ
No comments:
Post a Comment