Friday, March 18, 2022

நிதி நடைமுறைகள் வினாவிடைகள் தொடர் - 01

ஆளுக்குரிய வேதனாதிகளும் ஓய்வூதியமும் அடுத்த வருடத்தில் கொடுக்கப்படுவததற்கான நியதிகளை குறிப்பிடுக. -நி.பி 115(5)



அ. நடப்பு வருடத்தின் ஒத்த ஏற்பாடுகளிலிருந்து அத்தாட்சிப்படுத்தலின்றி கொடுப்பனவு செய்யலாம்

ஆ. இக்கொடுப்பனவுகளுக்கு சேமிப்பு இல்லாவிடின் குறைநிரப்பு ஏற்பாடு பெறப்படலாம்;.

இ. தாமதத்திற்குரிய காரணம் எவ்வாறாயினும் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு விடப்படலாம்.

நிதியமைச்சரின் பொறுப்புக்களை குறிப்பிடுக. – நி.பி 124

அ. அரசிற்கான அரசிறைகளை சேர்த்தல்
ஆ. அரசாங்கத்திற்கு சொந்தமான பிற பணங்களை சேர்த்தல்
இ. அரசாங்க நிதி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல்

அரசிறை கணக்குகள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? – நி.பி 151

அ. ஒவ்வொரு நிதியாண்டு முடிவடைந்ததும் அரசிறை கணக்கீட்டு உத்தியோகத்தரால் தயாரிக்கப்படும். இதில் அடங்குவன,

1) அரசிறை தலைப்புகள் பற்றிய விவரணங்கள்
2) மூன்றாண்டுகளில் சேகரிக்கப்பட்ட அரசிறைத் தொகை
3) கூற்று தயாரிக்கப்படும் ஆண்டுக்கான அரசிறை மதிப்பீடு
4) அந்த ஆண்டில் சேகரிக்கப்ட்ட அரசிறை
5) மேலதிகம் அல்லது குறைவுக்கான காரணங்கள்

ஆ. இதில் கணக்கீட்டு உத்தியோகத்தர் கையொப்பமிட்டு கணக்காய்வாளர் அதிபதிக்கு அனுப்பப்படும்

இ. கணக்காய்வாளர் அதிபதி பரிசீலித்து அத்தாட்சிப்பத்தி திறைசேரிக்கு வெளியிடுவதற்காக அனுப்புவார்.

திணைக்களங்களின் ஆளுக்குரிய வேதனங்கள் கொடுப்பதற்கான உறுதிச்சீட்டுக்கள் தொடர்பில் சம்பந்தப்படுபவர்கள் யாவர்?- நிபி 201

அ. அனுமதியளிக்கும் உத்தியோகத்தர் – நியமனக்கடிதம் Appointment letter வழங்கும் அல்லது, நியமனம் செய்யும் உத்தியோகத்தர்

ஆ. அங்கீகரிக்கும் உத்தியோகத்தர் – நியமிக்கும் உத்தியோகத்தர் தொடர்பான நிர்வாக கடமைகளை மேற்கொள்ளும், மற்றும் வேதனங்கள், கூலிகள், என்பவற்றை அங்கீகரிக்கும் உத்தியோகத்தர்.

இ. அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர் -நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களின் வேதனப்பட்டியல்கள் கொடுப்பனவு உறுதிச்சீட்டுக்களை உறுதிப்படுத்தும் உத்தியோகத்தர்.

ஈ. பணம் வழங்கும் உத்தியோகத்தர்

திணைக்களங்களுக்கு தங்களது கொடுப்பனவுகளை செய்வதற்கு தேவையான நிதி கிடைக்கும் விதங்களை குவிப்பிடுக. – 204

அ. திறைசேரி – பெற்றுக் கொள்ளும் சகல பணங்களும்

ஆ. பிரதேச செயலகங்கள் – பெற்றுக் கொள்ளும் சகல பணங்களும், போதாதெனில் திறைசேரியிடமிருந்து பணம் பெற்றுக் கொள்ளல்

இ. அ,ஆ.இ வகுப்பு திணைக்களங்கள் – கட்டுநிதியாக பெற்றுக்கொள்ளல்.

வேதனத்தின் முற்பணம் வழங்கும் விதிகள் எவை? – 212(2)

அ. சம்பந்தப்பட்ட அலுவலரின் விருப்பப்படி பெற்றுக் கொள்ளலாம்

ஆ. அடுத்துவரும் ஆண்டுக்கான விருப்ப பத்திரத்தில் டிசம்பர் மாதத்தில் கையொப்பமிடப்பட வேண்டும்.

இ. அடுத்துவரும் ஆண்டில் மாற்றப்பட மாட்டாது.

ஏ. இது 1 ரூபாவின் மடங்காக இருக்கும்.

குறுக்குப் பதிவு Cross Entry என்றால் என்ன?

ஒரு கொடுப்பனவு உறுதிச்சீட்டிலிருந்து ஒரு தொகையை அறவிட வேண்டுமாயின் இவ்வறவிடல் உறுதிச்சீட்டில் குறுக்கு கோடிட்டு “X” பதிவு என சிவப்பு மையால் அடையாளமிட்டு குறிக்கப்படல் வேண்டும். இது குறுக்குப் பதிவு எனப்படும்.

தடுக்கப்பட்ட காசோலையொன்றுக்கு புதிய காசோலை வழங்குவதற்கான நடைமுறைகள் எவை? 393

அ. தடுக்கப்பட்ட காசோலைக்கு மீண்டும் காலநீடிப்பு வழங்க முடியாது
ஆ. காசோலை கிடைக்கும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கை

1) காசோலை அடியிதழில் தடுக்கப்பட்ட விபரம்
2) இறுதியாக வங்கி கணக்கிணங்கக் கூற்றில் மாற்றப்படாத காசோலை நிரலில் குறித்த காசோலைக்கு நேரே குறிப்பு
3) காசேட்டின் பதிவுக்கெதிராக குறிப்பு

இ. காசோலை கிடைக்காத பட்சத்தில் நட்டஈட்டுமுறி பெற்றுக் கொள்ளப்பட்டபின் புதிய காசோலை வழங்கலாம்

ஈ. நட்டஈட்டு முறி பெற முடியாதவிடத்து திறைசேரிக்கு அறிவித்து அனுமதி பெற்றுக் கொள்ளல்.

காசோலை அழிக்கப்பட்டு புதிய காசோலை வழங்கப்படாமை தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை குறிப்பிடுக. – 394

அ) காசோலை அழிக்கப்படு முன்னர் கோப்பில் இணைத்து வைக்கப்படல் வேண்டும்.

ஆ) அழிக்கப்பட்டமை பற்றிய விபரங்கள் கீழ்வருமாறு குறிக்க வேண்டும்

அ. அழிக்கப்பட்ட காசோலையின் அடியிதழில்
ஆ. இறுதியாக வங்கிக் கணக்கிணங்கக்கூற்றில் Bank Reconciliation மாற்றப்படாத காசோலை நிரலில்
இ. காசேட்டில்

இ) இப் பெறுமதி திணைக்களத்துக்கு வருமாகும். எனவே உரிய கணக்கிற்கு வரவு வைக்கப்படல் வேண்டும்.

ஈ) அத்தொகைக்கான பற்றுச்சீட்டு திணைக்களத்தலைவரின் பெயருக்கு எழுதப்பட வேண்டும்.

உ) பணம் பெற வேண்டியவர் பணம் தேவையில்லையென காசோலையை திருப்பி அனுப்புமிடத்து தபாலைத் திறக்கும் பதவிநிலை உத்தியோகத்தர் உடனடியாகத் தகுந்த முறையில் இரத்துச் செய்து பெறுவோரின் பெயரில் பற்றுச்சீட்டு வழங்க வேண்டும்.

அதன்பின் “ஆ”, “இ” இல் குறிப்பிட்டதன்படி நடவடிக்கை எடுக்கலாம்.

கேள்வி பெட்டிகள் எவ்வாறு அமைய வேண்டும்?

அ. எவரும் நேர்மையீனமாக கையாளுவதை தடுக்கும் வகையில் அமைதல்

ஆ. கேள்விகளை பெட்டியின் பிளவுகளினூடாக அகற்ற முடியாதிருத்தல்

இ. நல்ல பூட்டு போட்டிருத்தல்

ஈ. கேள்விச்சபை தலைவரால் நியமிக்கப்பட்ட பதவிநிலை உத்தியோகத்தரிடம் கேள்விப் பெட்டிக்கான திறப்பு இருத்தல்

உ. பெட்டி பதவிநிலை உத்தியோகத்தரின் அறையில் பாதுகாப்பாக வைத்திருத்தல்

கேள்வி பெட்டி திறக்கும் விதத்தினை குறிப்பிடுக?

அ. கேள்வி நேரம் முடிவடைந்தபின் பெட்டியை திறத்தல்

ஆ. தலைவரால் அல்லது அவரால் நியமிக்கப்பட்டவரால் கேள்விகள் திறக்கப்பட்டு தொடரிலக்கம் இடப்படல்

இ. திகதி பொறிக்கப்பட்டு திறக்கின்ற உத்தியோகத்தரின் முதலெழுத்தொப்பம் இடப்படல்

ஈ. சமூகமாயிருந்த கேள்விதாரரின் பெயர் விபரம் பதியப்பட வேண்டும்.

உ. கேள்விதாரரின் பெயர் Tenderer Name, கேள்வியின் தொகை Tender Amount என்பன திறக்கின்ற உத்தியோகத்தரால் வாசித்துக் காட்டப்படல் வேண்டும்.

ஊ. அத்தொகைகள் பெறப்பட்ட விபரங்கள் வாசித்துக்காட்டப்படலாகாது

எ. யாதாயினும் ஒரு கேள்விதாரர் யாதாயினும் ஒரு கேள்வியின் தொகையை சரிபார்க்க கோரினால் அதன் பிரதி வழங்கப்படலாம்.

ஒப்பந்த விபரங்களில் அடங்கும் வாசகங்கள் எவை? – 701

அ. பிணை

ஆ. நிறைவேற்றுவதற்கு கொடுக்கும் காலம்

இ. தாமதங்களுக்குரிய நட்டங்கள்

ஈ. ஒப்பந்தம் பற்றி தீர்மானம் செய்யும் அதிகாரம் பெற்றவரின் பதவி

உ. இலங்கையரான தொழிலாளருக்கு வேலை கொடுத்தல்

ஊ. காப்புறுதி Insurance

எ. ஒப்பந்தத்தில் மாற்றங்கள்

ஏ. ஒப்பந்தம் சரியாக நிறைவேற்றப்படாவிட்டால் வைப்புப்பணத்தை நீக்கல் பற்றிய விபரம்

ஐ. ஒப்பந்தத்திற்கு இலங்கை சட்டங்களை பிரயோகித்தல்

ஒப்பந்தத்தை கண்காணித்தல் எவ்வாறு மேற்கொள்ளப்படும்? – 703(1)

அ) கட்டுவேலை, வழங்கல்களை மேற்பார்வை செய்தல், கொடுப்பனவுக்கான மதிப்பிடலை திணைக்களத்தலைவர் உறுதி செய்தல்

ஆ) காலநீடிப்புக்கள் நியாயமான வேளைகளில் அதற்கு அதிகாரமுடைய உத்தியோகத்தரால் கொடுக்கப்படல் வேண்டும்.

இ) ஒப்பந்த நியதிகளின்படி ஒப்பந்தம் நிராகரிக்கப்படடாலன்றி கட்டு வேலை முற்றுப் பெறாத நிலையில் கையேற்றல் ஆகாது.

ஒப்பந்தம் தொடர்பான மேன்முறையீட்டில் அமைச்சின் செயலாளருக்கான அதிகாரங்கள் எவை? – 704(1)

அ) ஒப்பந்தகாரர் செய்யும் மேனமுறையீடுகளை ஏற்றுக் கொள்ளலும் தீர்மானங்கள் எடுத்தலும்.

ஆ) பொருத்தமான வேளைகளில் ஒழிவு நட்டங்களையும், ஒப்பந்த நிபந்தனைகளையும் விட்டுக் கொடுத்தல்

இ) ஒப்பந்தகாரரின் வேண்டுகோளின்படி நடுத்தீர்ப்புக்கு உடன்படல்

ஈ) ஒப்பந்தத்துக்கு மேலதிகமான கொடுப்பனவுகளை அங்கீகரித்தல்.

ஒப்பந்தகாரரால் செய்யப்படும் தவறுகள் எவை?- 705

அ. ஒப்பந்தம் செய்ய மறுத்தல்
ஆ. பொருத்தமான முறையில் ஒப்பந்தத்தை நிறைவேற்ற தவறுதல்
இ. தகாத நடத்தை

தவறிழைக்கும் ஒப்பந்தகாரர் பட்டியலில் சேர்த்தலுக்கான நடைமுறைகளை குறிப்பிடுக? – 705

அ. . தவறிழைக்கும் ஒப்பந்தகாரர் பட்டியலில் ஏன் சேர்க்க்கூடாது என்பதற்கான விளக்கத்தை எழுத்துமூலம் திணைக்களத்தலைவர் கோர வேண்டும்.

ஆ. அவரது விளக்கம் திருப்தியில்லாவிட்டால் திணைக்களத்தலைவர் அதுபற்றிய முழு விபரங்களையும் அமைச்சிற்கு அனுப்ப வேண்டும்.

இ. அமைச்சின் கேள்விச்சபை தலைவர் அங்கீகாரத்திற்காக திறைசேரி செயலாளருக்கு அறிவித்தல் வேண்டும்.

ஈ. திறைசேரி செயலாளர் அங்கீகாரம் வழங்கினால் ஒப்பந்தகாரர் தவறிழைத்தவராக கருதப்படுவார்

தருவிக்கும் பொருட்பட்டியல் எவ்வாறு தயாரித்தல் வேண்டும்? – 738

1) இதற்கு படிவம் பொது 115 பயன்படுத்த வேண்டும்.

2) இது மூன்று பிரதிகளில் கொ.ம.சே.கூறிற்கு அனுப்ப வேண்டும்.

3) ஒவ்வொரு பிரதியிலும் அதன் ஒவ்வொரு பக்கங்களிலும் திகதியும் அடையாள எண்ணும் குறித்தல் வேண்டும்.

4) தருவிக்கும் பொருட்பட்டியலில் உள்ள விடயங்களுக்கு தொடரெண் இடப்படல்

5) படிவத்திலுள்ள அறிவித்தல்கள் கண்டிப்பாக பின்பற்றப்படல் வேண்டும்.

6) ஒவ்வொரு தருவிக்கும் பொருட் பட்டியலுக்கும் உரிய உத்தியோகத்தரால் கையொப்பமிடப்பட்டிருத்தல் வேண்டும்.

ஒப்பாய்வு சபையின் அறிக்கையின் மேல் எடுக்கும் நடவடிக்கைகள் எவை?

அ. கணக்கீட்டு உத்தியோகத்தரால் ஒரு பிரதி முதலில் கணக்காய்வாளர் அதிபதிக்கு அனுப்ப வேண்டும்.

ஆ. கணக்கீட்டு உத்தியோகத்தரால் அதிகாரமளிக்கப்படாத வேளைகளில் குறைவு, மேலதிகம், இழப்பு தொடர்பாக அவதானிப்பதுடன் கணக்கெடுப்பு நடாத்தி 3 மாதத்திற்குள் 2 பிரதிகள் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு அனுப்புதல் வேண்டும்.

இ. பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் தனது தீர்மானங்களுடன் ஒரு பிரதியை கணக்காய்வாளர் தலைமையதிபதிக்கும், மறு பிரதி உரிய திணைக்களத்திற்கும் அனுப்புவார்.

ஈ. உரிய திணைக்களம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பிணைப்பண இடாப்பில் அடங்கும் விடயங்கள் எவை? – 891

1) உத்தியோகத்தர் பெயர், பதவி
2) பிணையின் தன்மையும் தொகையும்
3) முறியின் பதவி இலக்கமும் திகதியும்
4) வங்கி பற்றுவரவு ஏடு இலக்கம்
5) கட்டுப்பணத்தை புதுப்பித்தல், திகதி, யாரால்
6) உரிமைக் கோரிக்கையில்லை சான்றிதழுக்காக விண்ணப்பித்த திகதி
7) உரிமைக் கோரிக்கையில்லை சான்றிதழின் இலக்கமும் திகதியும்,
8) திருப்பிக் கொடுக்கும் கட்டுப்பணத்தின் அரசிறைக்கான வரவின் விபரங்கள்

No comments:

Post a Comment