பெறுவனவுகள், கொடுப்பனவுகள், வங்கி நடவடிக்கைகள் காசேடு, ஒப்பந்தம் தொடர்பிலான வினாவிடைகள்
ஏனைய திணைக்களங்கள் மூலமான வருமானங்கள் எவை?
1. உத்தரவு பத்திர வரி
2. சொத்துக்கள் மாற்றுவதற்கான வரி
3. கட்டணங்கள் வாடகைRent/வட்டி Interest/ ஏனைய கொடுப்பனவுகள்
வரி அல்லா வருமானங்கள் எவை?
1. கூட்டுத்தாபனங்களுக்கும் சபைகளுக்கும் வழங்கப்பட்ட கடன் மீதான வட்டி (திறைசேரியால் அறவிடப்படுகின்றது) அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மீதான வட்டி
2. கடன் மீது செலுத்தல்கள்
3. விற்பனைகளும் கட்டணங்களும் (பரீட்சைக் கட்டணங்கள்)
4. பல வகைப்பட்ட திணைக்களங்களிலிருந்து கிடைக்கும் வருமானங்கள்
5, நடைமுறை மாற்றீடுகள் (இலங்கை மத்திய வங்கியில் லொத்தர் சபையால் மாற்றீடு செய்யப்படும் இலாபங்கள்)
6. நிலையான சொத்துக்களின் விற்பனை
7. பொது முயற்சியிலிருந்து கிடைக்கும் பெறுவனவுகள் (ரெலிகொம், காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மீதான அறவீடுகள்)
8. வாடகை
9. ஆக்க உரிமை அறவீடுகள்
10. தபால் திணைக்கள புகையிரத திணைக்கள அறவீடுகள்
11. இலாபங்களும் பங்கிலாபங்களும்.
12. ஒய்வூதிய நிதிக்கான செலுத்துகைகள்
செலவினம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் அதிகார பகிர்வுகள் எவை?
1. அதிகாரமளித்தல்
2. அங்கீகாரம்
3. சான்றுபடுத்தல்
4. கொடுப்பனவு.
மேலே குறிப்பிட்ட பணிகள் கையளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் முறையே அதிகாரமளித்தல் உத்தியோகத்தர் அங்கீகரித்தல் உத்தியோகத்தர், சான்றுப்படுத்தல் உத்தியோகத்தர், கொடுப்பளவு உத்தியோகத்தர் எனப் பதவிப் பெயரிடப்பட்டுள்ளனர்.
அதிகாரமளித்தல் உத்தியோகத்தரின் செயற்பாடுகளை குறிப்பிடுக.
அதிகாரமளித்தல் உத்தியோகத்தர் என்பவர் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையின் படி வழங்கல் வேலைக்கு அல்லது சேவைக்கு அதிகாரமளித்தல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட உத்தியோகத்தர் எனப் பொருள்படும். அத்தகைய அதிகாரமளித்தல் எழுத்தில் செய்யப்படவேண்டுமென்பதுடன் அவர் பின்வருவனவற்றிற்கு பொறுப்பாகவிருப்பார்.
(அ). வேலை வழங்கல் அல்லது சேவை பொருத்தமான அதிகாரத்தினால் தழுவப்பட்டிருத்தலையும் நிகழ்ச்சித் திட்டத்தின் / கருத்திட்டத்தின் சுற்றெல்லைக்குள் உட்படுவதையும் சம்பந்தப்பட்ட கணக்குகளில் தகுந்த முறையில் குறிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துதல்,
ஆ). அவர் தமது அதிகார எல்லையை விஞ்சாமலிருப்பதையும் விதிக்கப்பட்டுள்ள சகல நடைமுறைகளும் பின் பற்றப்பட்டிருப்பதையும் உறுதிப்படுத்தல்
இ). நிதியாண்டிற்குக் குறித்தொதுக்கப்பட்ட நிதியங்கள் விஞ்சப்படாமலிருப்பதை உறுதிப்படுத்தல்.
ஈ) தமது ஒதுக்கீடு ஒவ்வொன்றிற்கும் எதிராக எழும் பொறுப்புகள் மீது வருமதியாகவுள்ள தொகையையும் பதிவுசெய்யப்படும் தொகைகளுக்கு வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது கிடைக்கக் கூடியதாக வரும் மேற்பட்ட தகவல்களின் நோக்கில் தொடர்ச்சியான மீளாய்விற்கு உட்படுவதை உறுதிப்படுத்தல்,
(உ) உரிய தகவல்கள் சான்றுப்படுத்தும் உத்தியோகத்தருக்கு அனுப்பப்படுவதை உறுதிப்படுத்தல்.
ஊ) தமது வாக்குப்பணப் பேரேடு சான்றுபடுத்தும் உத்தியோகத்தரின் வாக்குப்பணப் பேரேட்டுடன் இணக்கஞ் செய்யப்படுவதை உறுதிப்படுத்தல்.
எ) கொடுக்கல் வாங்கல்களின் பணம் பெறுவோர் நிலை தொடர்பில் அவருக்கு ஏதேனும் ஐயம் இருக்குமிடத்து அவர் கணக்கீட்டு உத்தியோகத்தரின் ஆலோசனையை நாடுதல் வேண்டும்.
அங்கீகாரமளிக்கும் உத்தியோகத்தரின் செயற்பாடுகளை குறிப்பிடுக
சேவைகள், கட்டு வேலைகள் அல்லது வழங்கல் பூர்த்தி செய்யப்படுவதன் பேரில் அவற்றின் கோரிக்கைகளை அனுமதிப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் அங்கீகாரமளிக்கும் உத்தியோகத்தரென அழைக்கப்படுகின்றார்.
அவர் பின்வருவனவற்றை உறுதிப்படுத்துவதற்கு கணக்கீட்டு உத்தியோகத்தருக்குப் பொறுப்பானவராயிருப்பார்.
அ). உரிய அதிகாரமளிக்கும் உத்தியோகத்தினரால் / உடன்படிக்கையினால் வேலை அல்லது சேவை அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. என்பதை உறுதிப்படுத்துதல்.
ஆ). வீதங்கள் நியாயமானவை என்பதையும் கொடுப்பனவிற்கு அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை உடன்படிக்கை, நிதியங்கள் முதலியவற்றின் பிரகாரம் செய்யப்பட்டவை என்பதையும் உறுதிப்படுத்துதல்.
இ). வேலை வாய்ப்பு ஒப்பந்தமொன்றின் இயைபுள்ள விதிகளும் ஒழுங்கு விதிகளும் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்தல்.
ஈ), வழங்கல்களின் விடயத்தில் அவை நல்ல நிலையில் சரியான முறையில் பொறுபேற்கப் பட்டமையையும் நிதி ஒழுங்கு விதிகளின் நியதிகளில் அவை கணக்குக் காட்டப்பட்ட மையையும் உறுதிப்படுத்தல்,
உ), மின் உண்டியல்களின் கொடுப்பனவு விடயத்தில் அவை மாதாந்த மானி அளவீடுகளையும் பிற இயைபுள்ள விபரங்களையும் காண்பிப்பதற்காகப் பேணப்படும் பதிவேட்டுடன் சரிபார்க்கப்படல் வேண்டும். இரண்டு மாதங்களுக்கிடையில் அசாதாரன விலகலொன்று இருந்திருந்தால் அது பற்றி ஆராயப்படல் வேண்டும்.
சான்றுபடுத்தல் உத்தியோகத்தரின் செயற்பாடுகளை குறிப்பிடுக.
பண உறுதிப்பத்திரங்களைச் சான்றுப்படுத்தும் அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர் சான்றுபடுத்தல் உத்தியோகத்தரென அழைக்கப்படுகின்றார்.
அவருடைய கடமைகள் பின்வருவன சரியாகச் செய்யப்படுகின்றனவா என்பதைப் பார்வையிடுவதாகும்.
1). பண உறுதிப்பத்திரம் ஒவ்வொன்றின் பேரிலும் வழங்கப்படவேண்டிய தொகை நிகழ்ச்சித் திட்டம், கருத்திட்டம், செலவுவிடயக் குறியீடு முதலியவற்றின் மீதான சரியான விதிப்பாக விருப்பதுடன் நிதி அமைச்சரினால் ஒப்பமிடப்பட்ட ஆணைச்சீட்டொன்றினால் அங்கீகரிக்கப் பட்டிருத்தல்.
2), பண உறுதிப் பத்திரம் சரியான நிகழ்ச்சித்திட்டம் கருத்திட்டம், செலவுவிடயக் குறியீடு முதலியவற்றின் கீழ் ஒதுக்கீட்டுப் பேரேட்டில் பதியப்பட்டிருப்பதுடன் கொடுப்பனவு நடப்பு நிதி ஆண்டிற்காக வழங்கப்பட்ட தொகை மீது மிகையொன்றை ஏற்படுத்தாமல் இருத்தல்,
3) பண உறுதிப்பத்திரத்தில் காண்பிக்கப்பட்டுள்ள பெறுவோரின் / பெறுவோர்களின் பெயர்களும் கொடுப்பனவிற்கான தரப்பினரின் / தரப்பினர்களின் பெயர்களும் அதில் | காண்பிக்கப்பட்டுள்ள தொகையும் சரியானவைகளாக விருத்தல்.
4). நி.பி. 136 லும் 137 லும் உள்ள ஏற்பாடு சரியாக கடைப்பிடிக்கப் பட்டுள்ளன என்பதையிட்டு தன்னைத்தானே திருப்திப்படுத்திக் கொள்ளல் .
5) சகல இயைபுள்ள ஆவணங்கள் கோப்புகள் முதலியவற்றில் கொடுப்பனவு சான்று படுத்தப் பட்டுள்ளதென்பதை அவர் குற்ப்பிட்டுக் காண்பித்தல் வேண்டும். இது அதே கொடுப்பனவிற்கு மற்றுமொரு பண உறுதிப்பத்திரம் சமர்பிக்கப்படுவதைத் தடை செய்யும்.
6) மேலேயுள்ள (4) இன் தொடர்பில் இயைபுள்ள கோப்பிற்கு பண உறுதிப்பத்திரம் தொடர்பொன்றையுடையதாக இருத்தல் வேண்டும்.
7), முற்பணங்கள், உதவு தொகைகள், மேலதிக கட்டணங்களாக விதிக்கப்பட்ட உதவுதொகைகள் தண்டப்பணங்கள் முதலியவற்றின் கொடுப்பனவு தொடர்பில் அவர் தமக்கு அறிவிக்கப்பட்ட சகல அறிவீடுகளையும் கழித்தல் வேண்டும்.
8), சகல அமிசங்களிலும் பண உறுதிப்பத்திரம் செம்மையானதும் பூர்த்தியானதுமாகவிருத்தல். (சான்றிதழ்களின் வகைகள் நி.பி.237)
கொடுப்பனவு உத்தியோகத்தர்களின் செயற்பாட்டினை குறிப்பிடுக.
சான்றுப்படுத்திய பண உறுதிப்பத்திரம் மீது கொடுப்பனவுகளை செய்வதற்கு அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தவரொருவர் கொடுப்பனவு உத்தியோகத்தரென அழைக்கப்படுகின்றார். அவர் பின்வருவன செய்யப்பட்டுள்ளனவா என்பதைக் கவனித்துக் கொள்ளல் வேண்டும்
1) கொடுப்பளவிற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட பண உறுதிப்பத்திரம் ஒவ்வொன்றும் சான்று படுத்துவதற்கு அதிகாரகளிக்கப்பட்ட உத்தியோகத்தரொருவரினால் சான்றுப்படுத்தப் பட்டிருத்தல்,
2) சான்றுப்படுத்தல் உத்தியோகத்தினரால் அனுப்பப்பட்டதன் பின்னர் பண உறுதிப்பத்திரம் திரிபுபடுத்தப்பட்டுள்ளதற்கான சான்று எதனையும் கொண்டதாக இல்லாமலிருத்தல்.
3). கொடுப்பனவு ஒன்று செய்யப்பட்ட முன் தமது விசேட அறிவிற்குட்பட்ட எந்த விடயங்களும் கணக்கிற்கு எடுக்கப்பட்டிருத்தல்.
4) செய்யப்படும் கொடுப்பனவு ஒவ்வொன்றிற்கும் பற்றுச் சீட்டு ஒன்று பெறப்பட்டிருத்தல்.
5). பெறுவோரின் அடையாளம் நிரூபிக்கப்பட்டிருத்தல்
6), காசோலை, காசுக்கட்டளை முதலியனவற்றின் மூலம் செய்யப்படும் கொடுப்பனவு விடயத்தில் காசோலையில் அல்லது காசுக்கட்டளையில் காணப்படும் பெயர் பண உறுதிப்பத்திரத்தில் காணப்படுவதுடன் ஒத்திருத்தல்,
7), பண உறுதிப்பத்திரத்தில் காண்பிக்கப்படும் தேறிய தொகை உரிய முறையில் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் இது “கொடுக்கப்பட்டது” என்ற முத்திரை அச்சினால் குறிக்கப்பட்டு முதலெழுத்தொப்பமிடப்பட்டிருத்தல்.
8). கொடுப்பனவு ஒவ்வொன்றும் இயைபுள்ள பதிவேடுகளில் குறிக்கப்பட்டிருத்தல்.
பணங்கட்டுறுதிச்சீட்டு என்பதால் விளங்கிக் கொள்வதென்ன?
சேகரிப்பு உத்தியோகத்தரொருவர் (அல்லது அவரினால் அதிகாரமளிக்கப்பட்ட ஒருவர்) ஏற்பு உத்தியோகத்தரொருவருக்கு பணம் அனுப்பும் போது அது அவரினால் ஒப்பமிடப்பட்ட இயைபுள்ள பணம் கட்டுறுதிச்சீட்டினால் ஆதாரமளிக்கப்பட்டிருத்தல் வேண்டும். பொதுவாக உபயோகிக்கப்படும் பணக்கட்டுறுதிச் சீட்டு
பொதுப் பெறுகைகளுக்கு – படிவம் பொது 118
பற்றுச்சீட்டு வழங்கல் முறையினை விபரிக்க?
(1) அரசாங்கத்தின் சார்பில் பணத் தொகைகள் பெறப்பட்டவுடன் பணம் கொடுப்போருக்க எந்திரத்தினால் இலக்கமிடப்பட்ட உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டொன்று படிவம் பொது 172 இல் வழங்கப்படல் வேண்டும்.
(2) பற்றுச்சீட்டுகளை வழங்குவதற்கான விசேட படிவமொன்றை (உதாரணம் சுங்கத் தீர்வைகள்) வழங்குவதற்கான அங்கீகாரத்தை நிதிப் பணிப்பாளர் அதிபதியிடம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
(3) பற்றுச்சீட்டுகள் இருபக்க காபன் கடதாசியில் இணைப்படிகளில் எழுதப்படல் வேண்டும்
(4) பற்றுச்சீட்டுப்படிவத்தை நிரப்புவதற்கும் அதன் மீதான கையொப்பத்தை இடுவதற்கும் துடைத்தழிக்க முடியாதபடி எழுதும் பென்சில் அல்லது வன்மையான பேனை உபயோகிக்கப்படல் வேண்டும் உபயோகிக்கப்பட முன் சகல பற்றுச்சீட்டுகளிலும் திணைக்கள முத்திரை அச்சினால் திகதியிடப் படவும் முத்திரையிடப்படவும் வேண்டும் பழு தாக்கப்பட்ட பற்றுச்சீட்டுகள் அழிக்கப்படலாகாது அவை இரத்துச் செய்யப்பட்டு அவற்றின் இணைப்படியுடன் குண்டுசியினால் குத்தி வைத்திருக் கப்படல் வேண்டும்.
(5) பற்றுச்சீட்டுகள் ஏற்பு உத்தியோகத்தரினால் பின்வருமாறு வகுத்தமைக்கப்படல் வேண்டும்
(அ) பணத்தை ஏற்கனவே பெற்றுக் கொண்ட சேகரிப்பு உத்தியோகத்தருக்கு கையிலுள்ள எதிர்பார்க்கப்படாத பண மீதத்தை மீளளிப்பதில் கொடுப்பனவு உத்தியோகத்தருக்கு
(ஆ) பிற விடயங்களில் கொடுப்போரின் பேரில் பெறுகைகள் மீதான மேற்பார்வை இதன் பிரதான நோக்கம் பின்வருவனவற்றை உறுதிப்படுத்துவதாகும்
(1) சகல பெறுகைகளும் உடனடியாகவும் உரியதிகதிகளிலும் பெறப்படுதல் வேண்டும்.
(2) சகல பெறுகைகளும் இயைபுள்ள கணக்குகளில் வரவு வைக்கப்படுதல் வேண்டும்.
(3) அமைப்பில் பெறுகைகள் மீது பொருத்தமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று இருத்தல் வேண்டும்
பெறுவனவுகள் தொடர்பிலான செயற்பாடுகளை விபரிக்க?
பெறுகைகள் காசு, காசோலைகள், காசுக்கட்டளைகள், முத்திரைகள் முதலியவற்றின் உருவத்தில் இருக்கலாம். காசு அல்லது காசுக்கட்டளை பெறப்படும் போது படிவம் பொது 172 இல் பற்றுச் சீட்டொன்று உடனடியாகக் கொடுக்கப்படல் வேண்டும்.
வங்கி உத்தரவாதமளித்துள்ள காசோலைகளின் அல்லது வங்கிக் கொடுப்பனவு கட்டளைகளின் விடயத்தில் கூட இது செய்யப்படலாம். ஆனால் தனிப்பட்ட காசோலைகள் பெறப்படும்போது காசாக மாற்றப்படுவதற்கு உட்பட்டு பற்றுச் சீட்டொன்று வழங்கப்படலாமென்பதுடன் அது காசாக மாற்றப்படும்வரை பொருட்கள் எதுவும் வழங்கப்படவோ அல்லது சேவைகள் எதுவும் வழங்கப்படவோ கூடாது.
பெறப்படும் சகல காசோலைகளும், காசுக்கட்டளைகளும், காசோலைகள், காசுக்கட்டளைகள் இடாப்பில் (ஜி.ஏ எம்83) பதிவு செய்யப்பட்டு பதவிநிலை உத்தியோகத்தரொருவரினால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
பின்வருவனவற்றில் ‘காசோலை மூலமாக’ அல்லது ‘காசுக்கட்டளை மூலமாக’ என்ற சொற்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்.
(அ) பணங்கட்டுறுதிச்சீட்டு – படிவம் பொது 118
(ஆ) காசுப்பற்றுச்சீட்டு- படிவம் பொது 172
(இ) காசேட்டில்
நிதிப் பிரமாணம் 168 ஐ பார்க்க, அதன் பின்னர் சகல காசோலைகளிலும் காசுக்கட்டளைகளிலும் “குறுக்குக் கோடிட்டு” வங்கிபணம் கட்டும் நறுக்குகளில் பதிவு செய்யப்பட்டு காசாக மாற்று வதற்கு வங்கிக்கு அனுப்பப்படல் வேண்டும் -நி.பி.177(5)
கொடுப்பனவுகளுக்கான ஆதாரமான ஆவணங்கள் எவை?
கொடுப்பனவுகளுக்கு பொதுவாக உபயோகிக்கப்படும் பண உறுதிப்பத்திரங்கள் வருமாறு:
(அ) படிவம் பொது 33 சம்பளங்களுக்கு பொதுக் மேற்படி கொடுப்பனவுகளுக்கும் கட்டுநிதிகளுக்கும் முற்பணங்களுக்கும்.
(ஆ) படிவம் பொது 36 – வைப்புகளின் மீளளிப்புக்கு.
(இ) படிவம்பொது 177/178 – பிரயாணச் செலவுகளின் கொடுப்பனவிற்கு
(ஈ) படிவம்பொது 29 – வருமானத்திலிருந்து மீளளிப்புகளுக்கு
பண உறுதிப்பத்திரங்களுக்கு இலக்கமிடுதல் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும்?
பணங்கட்டுறுதிச் சீட்டுகள் எந்த தரப்பட்ட மாதத்திற்கும் சிவப்பு மையினால் அல்லது சிவப்புப் பென்சிலினால் தொடர் இலக்கமிடப்படல் வேண்டும். சகல கொடுப்பனவு பண உறுதிப்பத்திரங்களும் அவ் வண்ணம் நீலமையினால் அல்லது நீலப் பென்சிலினால் இலக்கமிடப்படல் வேண்டும்.
காசேடு பேணப்படும் விதத்தினை விபரிக்க?
அ) சகல அரசாங்க திணைக்களங்களும் அவற்றின் காசேடுகளை “படிவம் பொது 18” இல் வைத்திருத்தல் வேண்டும்.
ஆ) சகல பெறுகைகளும் இடது பக்கத்திலும் சகல கொடுப்பனவுகளும் வலதுபக்கத்திலும் பதியப்படல் வேண்டும்.
இ) பதிவுகள் பெறுகைகளின் திகதிகள், கொடுப்பனவுத் திகதிகளின் காலவரன் முறையின்படி செய்யப்படல் வேண்டும்.
ஈ) ஒவ்வொரு நாளின் முடிவிலும் காசேட்டிலுள்ள தொகைகள் மொத்தமாகக் கூட்டப்பட்டு சமப்படுத்தப்பட்டு மீதம் அடுத்த நாளுக்கு முற்கொணரப்படல் வேண்டும்.
உ) பெறுகைகளின் விடயத்தில் பணக் கொடுப்பனவு நறுக்கிலுள்ள இலக்கம், பொது 172 இன் இலக்கம் ஆகிய இரண்டும் காசேட்டில் பதியப்படல் வேண்டும்.
ஊ) கொடுப்பனவுகளின் விடயத்தில் பண உறுதிப்பத்திர இலக்கமும் (நீலம்) வழங்கப்பட காசோலையின் இலக்கமும் பதியப்படல் வேண்டும்.
வங்கிக்கணக்கிணக்கம் என்றால் என்ன?
நி.பி. 395 இன் நியதிகளில் காசேட்டு மீதம் ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் வங்கிகூற்றில் காணப்படும் மீதங்களுடன் கணக்கிணக்கம் செய்யப்படல் வேண்டும்.
இந்நோக்கத்திற்காக வங்கியினால் தேற்றப்பட்ட காசோலைகளையும் வங்கியினால் காசாக மாற்றப்பட்ட காசோலைகளையும் தெரிவுக் குறியிட்டபின் ”தேறாத காசோலைகளின்’ நிரலொன்றையும் ”காசாக மாற்றப்படாத காசோலைகளின்” நிரலொன்றையும் அக்குறிப்பிட்ட மாதத்தின் முடிவில் தயாரிப்பது அவசியமானதாகும்.
பெறுவனவுகளுடன் தொடர்புடைய மோசடிகளைத் தடை செய்வதற்கு பின்பற்றப்படக்கூடிய நடவடிக்கைகள் எவை?
(அ) கருமபீடத்தில் பெற்றுக் கொள்ளப்படும் சகல பணத்தொகைகளும் வை.ஆர். உடனும் வங்கியுடனும் சரிபார்க்கப்படல் வேண்டும்.
(ஆ) மிகைக்காசு எதுவும் வைத்திருப்பதற்கு அனுமதிக்கப்படலாகாது
(இ) மற்றைய பெறுகைகள் யாவும் (காசேடு) வங்கிக்கூற்றுடன் அடிக்கடி சரிபார்க்கப்படல் வேண்டும்
ஈ) விடய எழுதுவினைஞரால் எழுதப்படும் பணங்கட்டுறுதிச்சீட்டின்றி நேரடியாகச் காசு பெறுவதற்கு சிறாப்பர்களுக்கு அனுமதி வழங்கலாகாது
(உ) பெறுகைகளைச் சேகரிப்பதிலும் ஏற்றுக்கொள்வதிலும் சம்பந்தப்பட்டுள்ளவர்களின் கடமைகளை மாற்றுதல்
(ஊ) கடமைகள் ஒழுங்காகக் குறித்தொதுக்கப்படல் வேண்டும்.
(எ) பிரதான காசேட்டைத் தவிர்த்து பல காசேடுகள் பேணப்படுவதைத் தவிர்க்கவும்
(ஏ) சுலபமாகச் சரிபார்ப்பதற்கு உள்ளகக் கட்டுப்பாட்டை அமைத்தல்
(ஐ) காசை கிரமாமாகச் சரிபார்த்தல்
(ஒ) வங்கி கணக்கிணக்கம் கிரமமாக செய்யப்படுவதை உறுதிப்படுத்தல்
சில்லறை காசு தொடர்பிலான நடைமுறைகளை குறிப்பிடுக.
‘சில்லறை’ என்பது சிறியது எனப் பொருள்படும். எனவே ‘சில்லறைக்காசிற்கான’ தேவை சிறிய அவசரச் செலவுகளை எதிர் நோக்குவதற்கானதாகும். உதாரணம் ஊற்றுப்பேனை மைப்போத்தலொன்றை அல்லது 2/3 குண்டு முனைப் பேனைகளைக் கொள்வனவு செய்தல் அல்லது தபால் முதலியவற்றைக் கொண்டு வருவதன்பொருட்டு சிறு பணியாளரொரு வருக்கு பஸ் கட்டணம் வழங்குதல்.
காசேட்டில் மிக அதிகமான பதிவுகளைச் செய்தும் நாளாந்த சமப்படுத்தும் நடைமுறைகளையும் வங்கிக் கணக்கிணக்க வேலையையும் சிக்கலாக்கியும் காசேட்டில் பளுவை அதிகரிக்காமிலிருப்பதே முக்கியமான தேவையாகும்.
சில்லறைக் காசேட்டின் அமைப்பு எவ்வாறிருக்கும்?
சில்லறைக் கொடுப்பனவுகள் செய்யப்படும் நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் சில்லறைக்காசேடுகள் பேணப்படல் வேண்டும். அது பிரதான காசேட்டிற்குப் பொறுப்பாகவுள்ள உத்தியோகத்தர் தவிர்ந்த பிற உத்தியோகத்தரொருவரினால் கையாளப்படல் வேண்டும்.
இப்பதிவுகளைப் பதிவு செய்வதற்கு விசேட அச்சிட்ட இடாப்போ அல்லது புத்தகமோ கிடைக்ககூடிய நிலையில் இல்லை. சிகே. இடாப்பொன்றை தங்களுடைய திணைக்களத்தின் தேவைப்பாடுகளுக்கு பொருத்தமானாதாக வடிவமைத்த பின் அதில் சில்லறைக் காசேடு ஒன்று வைத்திருக்கப்படலாம்.
வங்கிச் சேவைகளை பெற்றுக் கொள்வது தொடர்பிலான திறைசேரியின் செயற்பாடுகளை குறிப்பிடுக.
(1) அரசாங்கப்பணத்தின், அது நடைமுறைப்பணமாகவிருந்தாலும் சரி அல்லது வைப்பிலுள்ள பணமாகவிருந்தாலும் சரி, அதன் கட்டுக்காப்பிற்கு மத்தியவங்கியினதும் அல்லது இந்நாட்டிள்ள பிற எந்த வங்கினதும் சேவைகளை திறைசேரிப் பிரதிச் செயலாளர்பெற்றுக்கொள்ளலாம்.
(2) திறைசேரிப் பிரதிச் செயலாளர் தம்மால் அங்கீகரிக்கப்பட்ட எந்த வங்கியிலும் உத்தியோக பூர்வ கணக்குகளை திறப்பதற்கும் அவ்வங்கியில் வைத்திருக்கப்படவேண்டிய அரசாங்க பணத்தொகையை மட்டுப்படுத்துவதற்கும் திணைக்களத்தலைவர்களுக்கும் பிற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் அதிகாரமளிக்கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கியில் உத்தியோகபூர்வ கணக்குளை உத்தியோகத் தரொருவர் வைத்திருக்குமிடத்து திறைசேரிப் பிரதிச் செயலாளர் அத்தகைய கணக்குகள் பயன் படுத்தப்பட வேண்டிய அளவையும் முறையும் பற்றி பணிக்கலாம்
ஒரு திணைக்களத்தில் காசோலைகளின் நடைமுறைகளை விபரிக்குக.
(1) காசோலைகளில் சரியான தொகை எழுதப்படல் வேண்டும். காசோலை எழுதுபவரினால் சொற்களும் இலக்கங்களும் எழுதப்பட்ட பின்னர் மோசடியான இமைச் செருகல்கள் அச்சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் முன்னாலும் பின்னாலும் செய்யப்படக் கூடியதாக இடைவெளி விடப்படாமல் இருப்பது பற்றி கவனம் எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும்.
எழுதப்படும் சொற்களும் இலக்கங்களும் கூடியவரை நெருக்கமாக ஆரம்பிக்கப்பட்டு எழுதப்படல் வேண்டுமென்பதுடன் எழுதப்பட்ட பின் விடப்படும் ஏதேனும் இடைவெளியை நிரப்புவதன் பொருட்டு கோடு ஒன்று கீறப்படல் வேண்டும்.
சொற்களில் குறிப்பிடுவதற்கான தொகையின் உருவமைப்பு பின்வருமாறு இருத்தல் வேண்டும். ”ரூபா………… மட்டும் அல்லது “ரூபா…………. உம் சதம்………..மட்டும் பெறுவோன் அவருடைய பதவிப் பெயரினால் குறிப்பிடப்படும் போது அப்பதவிப் பெயர் முழுமையாக எழுதப்படவேண்டுமென்பதுடன் சுருக்கப்பெயரினால் அப்பதவிப் பெயர் குறிப்பிடப் படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
உதாரணம் ”அ,அ,” அல்லது ”பு,சே,மு, அ’ என்ற சுருக்கப் பெயர்கள் அஞ்சல் அதிபதி என்பதற்காகவோ அல்லது புகைவண்டிச் சேவை முகாமையாளர் அதிபதி என்பதற்காகவோ பயன்படுத்தப்படலாகாது.
திகதியை எழுதும்போது மாதம் சொற்களில் எழுதப்படல் வேண்டும். காசோலைகள் துடைத்தழிக்க முடியாத மையினால் அல்லது காசோலைகளை எழுதும் கருவியினால் தயாரிக்கப்படல் வேண்டும். காசோலைகளைத் தயாரிப்பதற்கு குண்டு முனைப்பேனைகள் உபயோகிக்கப்படலாகாது.
குறிப்பு:- காசோலைகள் எழுதுவதற்குப் பொருத்தமான விசேட துடைத்தழிக்க முடியாத மையை அரசாங்க பண்டசாலைத் திணைக்களத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்படல் வேண்டும்
காசோலைகளின் பதிவுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படல் வேண்டும்?
(1) காசோலை ஒவ்வொன்றின் தொடர்பிலும் பின்வரும் விவரங்களைக் காண்பிக்கின்ற அஞ்சல் மூலம் அனுப்பப்படும் சகல காசோலைகளின் பதிவேடொன்று ஒவ்வொரு திணைக்களத்திலும் வைத்திருக் கப்படல் வேண்டும்.
(அ) காசோலைத் திகதி
(ஆ) காசோலையின் இலக்கம்
(இ) பணம் எடுக்கப்படும் வங்கியின் பெயர்
(ஈ) சமர்ப்பிக்கப்படும் தரப்பினர்
(உ) காசோலையின் தொகை
(ஊ) பண உறுதிப்பத்திர இலக்கத்தின் தொடர்பு
(எ) அனுப்பற் திகதி
(ஏ) கொடுப்பனவு பெற்றுக் கொண்டமை அறிவித்தற் திகதி
(ஐ) அனுப்பலுக்கு பொறுப்பாகவுள்ள உத்தியோகத்தரின் முதலெழுத்தொப்பம்
(ஒ) காசோலையின் அனுப்பல் நேரத்தில் பண உறுதிப்பத்திரம் ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்டமை பற்றி அறிவிக்கப்பட்டிருக்குமிடத்து அந்தவிடயம் பற்றி பந்தி (ஏ) யின் கீழ் பொருத்தமான முறையில் குறிக்கப்பட்டிருக்கும்
என்ன காரணங்களின் நிமித்தம் காசோலைகள் திருப்பி அனுப்பப்படுகின்றன?
(1). பெறுவோனின் புறக்குறிப்பு ஒழுங்கீனமானது.
(2). பெறுவோனின் புறக்குறிப்பு தேவைப்படுகின்றது.
(3), பெறுவோனின் புறக்குறிப்பு தெளிவில்லாமல் இருப்பது.
(4). ஒழுங்கை மிகைக்கின்றது.
(5), காசோலை எழுதுபவருக்கு திருப்பி அனுப்புதல்,
(6), விளைவுகள் தீர்வு செய்யப்படவில்லை , தயவு செய்து திரும்பவும் சமர்பிக்கவும்.
(7). நாட்பட்ட காசோலை
(8). கணக்கு முடிவுறுத்தப்பட்டுள்ளது.
(9). திகதி பின்தள்ளிக் குறிக்கப்பட்டள்ளது.
(10). காசோலை எழுதுபவரினால் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளது,
(11). சொற்களிலும் இலக்கங்களிலும் உள்ள தொகை மாறுபடுகின்றது.
(12). காசோலை உருச்சிதைக்கப்பட்டுள்ளது.
(13). காசோலை எழுதுபவரின் கையொப்பம் எமது வசமுள்ள மாதிரியிலிருந்து வித்தியாசப்படுகின்றது.
(14). மாற்றம் காசோலை எழுதுபவரின் முழுமையான கையொப்பத்தை வேண்டுகின்றது.
(15), தீர்வு செய்யும் முத்திரை தேவைப்படுகின்றது.
(16), காசோலை கிரமமற்ற முறையில் எழுதப்படுகின்றது.
(17), ” பெறுவோனின் கணக்கிற்கு ” மட்டும்.
(18). ஒழுங்கு செய்யப்படவில்லை
(19), காசோலை எழுதுபவர் இறந்துவிட்டார்.
ஒப்பந்தகாரர்களுக்கு உதவி
தொழில் நுட்ப மதியுரையும் வழிகாட்டலும்
* காசு முற்பணம் – செயற்பாட்டிற்கு கொணர்தற்கான முற்பணம் – திறைச்சேரிச் சுற்றறிக்கை இலக்கங்கள் நிதி 222/1984, நிதி 309/1992 – கணக்கு – மீதான கொடுப்பனவுகள். – பொருள் பண்டக் கொள்வனவுக்கான முற்பணம் 109
ஒப்பந்தத்திற்குத் தேவையான பொருள் பண்டங்கள்.
* கிடைகக் கூடியனவாயின் பொறிகளும் உபகரணங்களும்,
* வேலை செய்தல், வாழிட வசதிகளும்; வேலைக்களத்திலேயே களஞ்சிய வசதிகள். – திணைக்கள அறவீடுகளும் இருப்பின் சுங்கத் தீர்வையும், – வாடகைக் கட்டணங்களும் உட்பட்ட கிரயம் பொருத்தமான சந்தர்ப்பங்களில் அறவிடப்படும்.
ஒழிப்பு இழப்பீடுகள் (LIQUIDATED DAMAGES)
ஒப்பந்தக்காரர் ஒப்பந்தத்தைப் பூர்த்தி செய்யும் திகதியில் நிறைவேற்றாமல் விடுவதனால் ஏற்படும் இழப்பீட்டைச் செலுத்துவதே ஒழிப்பு இழப்பீடு ஆகும். (வழக்கமாக இந்தத் தொகை ஒப்பந்தக் கொடுப்பனவிலிருந்து அறவிடப்படும்)
ஒழிப்பு இழப்பீடு ஒரு தண்டம் ஆகாது. – ஒழிப்பு இழப்பீட்டுக் கொடுப்பனவு ஆனது (அறவீடு) ஒப்பந்தத்தை இரத்துச் செய்யும் விளைவை ஏற்படுத்தாது. = ஒப்பந்தத்தைப் பூர்த்தி செய்யும் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்காது. – ஒப்பந்தத்தின் பொறுப்பிலிருந்து விடுபடச்செய்யாது. – சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளரினால் ஒழிப்பு இழப்பீட்டு அறவிடப்படாது விட்டுவிடல் கூடும்.
நியாயமான சூழ்நிலைகளின் கீழ் ஒப்பந்தக்காரர் போதிய காலத்திற்கு முன் விண்ணப்பித்து இருந்தால் மாத்திரம் பூர்த்தித் திகதி நீடிக்கப்படலாம். ஒழிப்பு இழப்பீட்டு அறவீடு மீளளிக்கப்படலாகாது, அத்துடன் அல்லது அமைச்சின் செயலாளரின் முன்னங்கீகாரம் இன்றி, பூர்த்தி திகதி நீடிப்பினைச் சீராக்கும் அங்கீகாரம் அளிக்கப்படலாகாது.
No comments:
Post a Comment